அடுத்த மாதம் புலிகள்-இலங்கை அரசு பேச்சுவார்த்தை
சென்னை:
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்கவுள்ள நார்வே தூதுக்குழு உறுப்பினர் வெஸ்ட்போர்க்,பிரபாகரனிடம் மே மாத மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதி, நேரம் ஆகியவை குறித்துவிவாதிப்பார் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஆளும் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், விவசாயத்துறை அமைச்சருமான ஜெயரத்னே கூறுகையில்,தமிழ் புத்தாண்டு முடிந்ததும் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கவுள்ளது. அப்போது அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிடுதலைப்புலிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான கொள்கைகளை உருவாக்குவார்.
அமைதிப் பேச்சுவார்த்தையில் பிரதிநிதிகளாக யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்து இன்னும் தகவல்கள்வெளியிடப்படவில்லை. இருப்பினும் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்குவது உறுதி.
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் முன்னிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் முதல்கட்டபேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, இலங்கைக்கான நார்வே தூதரும், தூதரக உறுப்பினர் இன்னொருவரும் புலிகள் கட்டுப்பாட்டில்இருக்கும் வன்னி பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனர்.
இதுகுறித்து புலிகளின் வானொலியான வாய்ஸ் ஆப் டைகர்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கான நார்வேதூதர்கள் வெள்ளிக்கிழமை பல்லமாடு பகுதியில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை சந்தித்துப்பேசினார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்களை வன்னியில் மூத்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் எஸ்.தங்கன், புலித்தலைவன் ஆகியோர்வரவேற்றனர். புலிகள் பகுதிக்கு வந்த அவர்கள் பிரபாகரனை சந்தித்தார்களா என்பது குறித்து தகவல்கள் இல்லைஎன்றும் கூறியுள்ளது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மற்றும் தூதுக்குழுவில்இடம்பெற்றுள்ள வெஸ்ட்போர்க் ஆகியோர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார்கள்.
இதற்கிடையே, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில்கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் நேரம், இடம், தேதி ஆகியவை குறித்து இலங்கை அரசு ஏப்ரல்மாத இறுதியில் தெரிவிக்கும் என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு வசதியாக அரசு வன்னி பகுதிக்கு வாகனங்கள் செல்வதற்குவிதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேவும் இந்த மாதம் 3 வது வாரத்தில் நார்வே தலைநகர் ஓஸ்லோ செல்கிறார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications