ராமதாசுக்கு காங்.பதிலடி: பாண்டியில் தனித்து போட்டி
டெல்லி:
பாண்டிச்சேரியில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து, காங்கிரஸ் இரண்டு நாட்களில் முடிவு தெரிவிக்கவேண்டும் என்று ராமதாஸ் கெடு விதித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் பாண்டிச்சேரியில் தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அதாவது பாண்டிச்சேரியில் தங்கள் தலைமையிலான கூட்டணியில் அதிமுகவுக்கு 10 இடங்களும், அதில் ஒரு சிலஇடங்களை பாமகவுக்கு ஒதுக்குவதாகவும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களில் அதிமுக பதில்கூறவில்லையெனில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள தொகுதிகளில் 10 தொகுதிகளை பாமகவுக்கு அளித்து விட்டு, தேர்தலில் வெற்றிபெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் பாமக ஆட்சியமைக்கலாம் என்று உடன்பாடு செய்து கொண்டார்ஜெயலலிதா.
இதுகுறித்து பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று மூப்பனாரும் அமைதியாக இருந்து விட்டார். தற்போதுபாண்டிச்சேரியில் தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தை எழுந்த போது பாமகவை ஆட்சியமைக்க விடமாட்டோம் என்று காங்கிரசார் கூறினர்.
இந்த நிலையில் பாண்டிச்சேரியில் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொள்வது குறித்து மூப்பனார் மூலம் முயற்சிமேற்கொண்டு வந்தனர் காங்கிரசார். ஆனால் ஜெயலலிதாவோ கூட்டணி கட்சிகளை விட அதிமுகபாண்டிச்சேரியில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும் என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கடும்அதிர்ச்சியடைந்தது. மீண்டும் மூப்பனாரை வைத்து காய்நகர்த்த முயற்சித்தனர்.
பின்னர் ஜெயலலிதாவுடன் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார். இவை எதுவும்சுமூகமாக முடியவில்லை.
அதாவது பாமகவுக்கு 9 தொகுதிகள், அதிமுகவுக்கு 9 தொகுதிகள், காங்கிரசுக்கு 9 தொகுதிகள், தமாகாவுக்கு 2,கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் காங்கிரஸ் பிடிவாதமாக இருந்தது.
இதையடுத்து கடும் கோபமடைந்த ராமதாஸ்,பாண்டிச்சேரியில் கூட்டணி குறித்து காங்கிரஸ் 2 நாட்களில் முடிவுஅறிவிக்க வேண்டும். 2 நாட்களில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை இழுத்தடிப்பது காங்கிரஸ் தலைவர்நாராயணசாமிதான்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கைப்படி பாமக 10 தொகுதிகளிலும், அதிமுக 11 தொகுதிகளிலும், மீதமுள்ள 9இடங்களில் காங்கிரஸ், தமாகா போட்டியிட வேண்டும். இதை ஏற்றுக் கொண்டால்தான் அவர்களுடன் கூட்டணி.சனிக்கிழமை வரை பார்ப்போம். இல்லாவிட்டால் தேர்தல் பணிகளில் இறங்கி விடுவோம் என்றார் ராமதாஸ்.
இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் புதிய தொகுதிப்பங்கீட்டை அறிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,பாண்டிச்சேரியில் காங்கிரஸ் நிலையான கட்சி. பாமகவுடன் ஆட்சியை ஒருபோதும் பங்கு போட்டுக் கொள்ளமுடியாது.
பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமாகா கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிடும். 10 தொகுதிகள் அதிமுகவுக்குக்கொடுக்கப்படும். இதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் கூட்டணி. இல்லையென்றால் அவர்கள் பிரிந்து செல்லலாம்.இதற்கு அவர்கள் இரண்டு நாட்களில் பதில் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications