ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்றது ஆஸி.
கோவா:
கோவாவில் வெள்ளிக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை, ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள்வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என்ற புள்ளிக்கணக்கில்வென்றுள்ளது.
மர்மகோவாவில் இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5வது ஒருநாள் போட்டி வெள்ளிக்கிழமைதொடங்கியது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியமானது. இரண்டு அணிகளுமே 2-2 என்ற சமநிலையில் இருந்ததால் இந்த போட்டியை வெல்லும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிமிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது.
டெஸ்ட் தொடரை 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்தியாமுற்றுப்புள்ளி வைத்தது.
5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரையும் இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வெள்ளிக்கிழமைகாலை பரபரப்பான 5வது இறுதி ஒரு நாள் போட்டி தொடங்கியது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சச்சின் டெண்டுல்கர் விரைவிலேயே ஆட்டமிழந்தார்.ஆனாலும் ஆஸ்திரேலியாவுடன் நடந்த எந்த போட்டியிலுமே சரியாக ஆடாத இந்சிய அணித்தலைவர் சவுரவ்கங்குலி சிறப்பாக ஆடி 74 ரன்கள் குவித்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஒரு நாள் கிரிக்கெட் விதிமுறைகளின் படி பேட்ஸ்மேனின்தோள்பட்டைக்கு மேல் பந்து சென்றால் அது நோ பால் என்று அறிவிக்கப்படும். அந்த பந்தில் அவுட் ஆனால்அவுட் கிடையாது.
மெக்ராத் கங்குலிக்கு வீசிய பந்தும் கங்குலியின் தோள்பட்டைக்கு மேல்தான் சென்றது. அந்த பந்தை கங்குலிதொட்டதால் அது நேராக விக்கெட்கீப்பர் கையில் சென்று தஞ்சம் புகுந்தது.
நோ பால் என்று அறிவிக்கப்பட வேண்டிய பந்து நோபால் என்று அறிவிக்கப்படததால், அம்பயரின் தவறால்கங்குலி ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்த வி.வி.எஸ் லட்சுமண்வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் சதம் அடித்தார்.
ஆனால் அதன் பின் வந்த எந்த இந்திய அணி வீரரும் சிறப்பாக ஆடவில்லை. இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட்இழப்புக்கு 265 ரன்களை எடுத்தது.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. துவக்கஆட்டக்காரரான கில் கிறிஸ்ட் சிறப்பாக ஆடி 76 ரன்கள் குவித்தார். ஆனாலும் ஆஸ்திரேலிய அணியினரின்விக்கெட்டுகள் சரிந்து கொண்டுதான் இருந்தன.
5 விக்கெட் இழப்புக்கு 195 என்ற நிலையில் ஆஸ்திரேலியா இருந்த போது இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்புரசிகர்களிடையே நிலவி வந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியின் மைக்கேல் பெவன் சிறப்பாக ஆடி 87 ரன்கள் குவித்து தனது அணிக்கு வெற்றிதேடித்தந்தார்.
ஆஸ்திரேலியா 48 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இந்த போட்டியையும் தொடரையும்வென்றது. இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடித் தந்த மைக்கேல பெவன்ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த போட்டியில் பேட்டிங்கில் சோபிக்காத டெண்டுல்கர் சிறப்பாக பந்து வீசினார்.அவர் 10 ஓவரில் 35 ரன்கள்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஒரு நாள் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையம் அவர் நிகழ்த்தினார். இப்போது ஒரு நாள்போட்டியில் 10,000 ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஒரே வீரர் என்ற புகழை பெற்றுள்ளார்டெண்டுல்கர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications