தமிழகம் முழுவதும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவை:
முப்பது அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள்காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட பஞ்சாலைத் தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.
கோவையில் தமிழ்நாடு பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் நஞ்சப்பன் கூறியதாவது:
பஞ்சாலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் வரும் ஏப்ரல் 16ம் தேதி தொடங்குகிறது.
இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு பிறகும் பலன் கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த வேலை நிறுத்தம் குறித்து அனைத்து மில்களுக்கும் நோட்டீஸ்கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் தென்னிந்திய பஞ்சாலைகளின் சங்கம் (சைமா) மற்றும் தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்கம்(சிஸ்பா) ஆகியவற்றுடன் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் பலன் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த போராட்டத்தில்ஈடுபட உள்ளோம் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications