Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவில் அதிகரித்து வரும் ஆசியர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் வாழும் ஆசிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவில் 2000மாவதுஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

போஸ்டன் நகரில் வெள்ளையர்கள் மிகவும் குறைவாகவே வசித்து வருகின்றனர். ஏனெனில் கடந்தபத்தாண்டுகளில் இங்கு வசித்து வரும் கருப்பர் இன, ஆசிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன.

போஸ்டனில் வெள்ளையர்கள் 49.5 சதவீதம் உள்ளனர். ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் 23.8 சதவீதம் வாழ்ந்துவருகின்றனர். ஆசியர்கள் 7.5 சதவீதத்தினர் வசித்து வருகின்றனர். பிற சிறுபான்மை மக்கள் 4.8 சதவீதம் உள்ளனர்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகள் 2000மாவது ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்தஅறிக்கைப்படி போஸ்டனில் வாழும் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்அல்லது கருப்பர் இனத்தினர் எனத் தெரிய வந்துள்ளது.

வடக்கு கரோலினாவில் மொத்த மக்கள் தொகை 8.05 மில்லியன். இதில் 1.4 மில்லியன் ஆசிய மக்கள் வசித்துவருகின்றனர்.

1990ம் ஆண்டு வடக்கு கரோலினாவின் மொத்த மக்கள் தொகை 6.62 மில்லியன். இதில் ஆசியாவைச்சேர்ந்தவர்கள் 49, 970 பேர். பத்து ஆண்டுகளில் 127.5 சதவீதம் ஆசிய மக்கள் இங்கு அதிகரித்துள்ளனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள மொத்த மக்கள்தொகை 4.01 மில்லியன். இதில் ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மட்டும்0.9 சதவீதம் உள்ளனர். அதாவது 36, 014 பேர் மட்டுமே உள்ளனர்.

1990ம் ஆண்டு தெற்கு கரோலினாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 3.48 மில்லியன். இதில் ஆசியர்கள் 21, 399பேர் அல்லது 0.6 சதவீதம் பேர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் தெற்கு கரோலினாவில் வசித்து வரும் ஆசியமக்களின் எண்ணிக்கை 68.3 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மிசெளரியில் மொத்த மக்கள் தொகை 5.59 மில்லியன். இதில் ஆசிய மக்கள் தொகை 61,595 ஆகும். அதாவது 1.1சதவீதம். 1990 ம் ஆண்டு இங்கு 0.8 சதவீத ஆசிய மக்கள் வசித்து வந்தனர். மொத்தம் உள்ள 5.11 மில்லியன்மக்கள் தொகையில் 39, 271 பேர் ஆசியர்களாக இருந்தனர். 1990ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பத்துஆண்டுகளில் 56.8 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.

ஒக்லஹாமாவில் உள்ள மொத்த மக்கள்தொகை 3.45 மில்லியன். அதில் ஆசியர்களின் எண்ணிக்கை 46,767 பேர்.அதாவது 1.4 சதவீதம் பேர்.

கொலம்பியாவில் மொத்த மக்கள்தொகை குறைந்து வந்தாலும், அங்கு வாழும் ஆசியர்களின் எண்ணிக்கைநாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 2000மாவது ஆண்டில் கொலம்பியாவில் வாழும் மொத்த மக்கள்தொகை5,72, 059. இதில் ஆசியர்களின் எண்ணிக்கை 15, 189 ஆகும். அதாவது 2.7 சதவீதம் பேர்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+