அரிசி ஆலை குண்டுவெடிப்பு: அல் உம்மா பாஷா விடுதலை
பூந்தமல்லி (சென்னை):
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை குண்டுவெடிப்பு வழக்கில் பாஷா உள்பட 5 பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சாலியமங்கலம் என்ற கிராமத்தில் அப்துல் கரீம் என்பவர் அரிசிஆலை நடத்தி வருகிறார். இந்த அரிசி ஆலையில் 7.2.1998 அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில்இப்ராஹிம், ரபீக், ஷேக் இஸ்மாயில் மற்றும் காவலாளி சீனிவாசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். மேலும் 8 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
அப்துல் காதர், அப்துல் அமீது, அப்துல் குத்தூஸ், முகமது அலி ஜின்னா, அபுதாகீர், கலீல் பாட்ஷா, அக்தர் பாட்ஷா.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அபுதாகீர் கடந்த வருடம் இறந்து விட்டார். இந்த வழக்கு திங்கள்கிழமைவிசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ராஜமாணிக்கம் கூறிய தீர்ப்பு விவரம் வருமாறு:
அம்மாப்பேட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்துல்காதருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அபராதம் கட்டத் தவறினால் 13 மாத ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
அப்துல் சலீமுக்கும், அப்துல் குத்தூசுக்கும் 5 ஆண்டு தண்டனையும், ரூ 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.
அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா, அப்துல் அமீது, முகமது அலி ஜின்னா, கலீல் பாஷா, அக்தர் பாஷா ஆகிய 5பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications