திமுக, பாஜக உறவை முறிக்க சதி செய்யவில்லை: மதிமுக
கோவை:
திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே உள்ள உறவை முறிக்க மதிமுக சதி செய்ததாக முதல்வர் கருணாநதி கூறுவதுமுற்றிலும் தவறு, அந்த எண்ணம் துளி எங்களிடம் இருந்தது இல்லை என கோவையில் மதிமுக பொருளாளர்கண்ணப்பன் தெரிவித்தார்.
கோவையில் நடக்கவிருக்கும் மதிமுக மாநாடு குறித்த ஏற்பாடுகளை மதிமுக பொருளாளார் கண்ணப்பன் செய்துவருகிறார். மாநாட்டுப் பந்தலில் கண்ணப்பன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் வரும் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி தான் முதல்வர் என பிரச்சாரத்தில்ஈடுபட்டோம். கட்சிக்காக நிதி திரட்டினோம். தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்னரே அவருக்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்தோம். அதற்கான பரிசு தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை.
பாரதிய ஜனதாக் கட்சிக்கு அதிமுக அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றபோது திமுக ஆதரித்தது. அப்போதுபிரதமர் வாஜ்பாய், எங்களிடம் கேட்டார். நாங்கள் மத்தியில் நிலையான வாஜ்பாய் அரசு கவிழ காரணமாக இருக்கமாட்டோம். திமுகவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதற்காக மத்தியில் ஆட்சி தொடர திமுகஅளிக்கும் ஆதரவை ஏற்றுக் கொள்ளும்படி தெரிவித்தோம்.
இப்போது கருணாநிதி, திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே உள்ள உறவை முறிக்க மதிமுக சதி செய்வதாகக்கூறியுள்ளார். இது முற்றிலும் தவறு, அந்த எண்ணம் எங்களிடம் துளி அளவு கூட இல்லை. எங்களால் எந்த உறவும்பாதிக்காது.
பாரதிய ஜனதாக் கட்சியை நாங்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்தாலும் கூட, எங்களுக்கு பாரதி ஜனதாக் கட்சிஆதரித்து பிரச்சாரம் செய்யாது என்பது நாங்கள் அறிந்ததே. இதனால் எங்களுக்கு எவ்வித வருத்தமோ,கவலையோ இல்லை.
தேர்தலுக்குப் பிறகு எங்களுக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்யக் கோரி திமுகநிர்ப்பந்தித்தால், அதனை வாஜ்பாய் அரசு ஏற்காது.
கோவையில் நடக்கும் மதிமுக மாநாடு முழுக்க முழுக்க மதிமுகவின் மாநாடு. இந்த மாநாட்டிற்கு பிற கட்சித்தலைவர்களையோ, கூட்டணிக் கட்சியினரையோ அழைக்கவில்லை என்றார் கண்ணப்பன்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications