ஜெ.க்கு வழங்கப்படும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: கில்
டெல்லி:
டான்சி நிலப்பேர வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட முடியுமாஎன்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம் என்று தலைமைதேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் வரும் மே மாதம் 10 ம் தேதி சட்டசபைத்தேர்தல் நடக்கிறது.
இந்தத் தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் சட்டசபைத் தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றுஅதிமுக பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் கோரிக்கையைநிராகரித்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையத்துக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனங்களான பி.ஈ.எல்.மற்றும் இ.சி.ஐ.எல்.நிறுவனங்கள்தயாரித்து வழங்கியுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைத்தான் நாங்கள் சட்டசபைத் தேர்தலுக்குப்பயன்படுத்துகிறோம்.
1999 லோக்சபா தேர்தலில் 18 மாநிலங்களில் 45 தொகுதிகளில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு நடந்தது. அதே போல்கடந்த லோக்சபா தேர்தலிலும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது தேர்தல் ஆணையத்திடம் 3 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள்மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதற்குரிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து நாங்கள் கருத்துக் கூற முடியாது.தீர்ப்பின்அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை இருக்கும் என்றார் கில்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications