ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் தனக்குவழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தான் குற்றவாளி அல்ல என அறிவிக்கக் கோரி ஜெயலலிதாதொடர்ந்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த மனு புதன்கிழமை நீதிபதி மலை சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணைநடந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலை சுப்ரமணியம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடஅனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:

டான்சி நிலப் பேர வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், சசி எண்டர்பிரைசஸ் வழக்கில் 2 ஆண்டுசிறைத்தண்டனையும் பெற்றவர் ஜெயலலிதா. இந்த தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3)ன் படி, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒரு நபர்தேர்தலில் போட்டியிடக் கூடாது. அதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக தான் குற்றவாளி இல்லைஎன்றும், டான்சி நிலப்பேர ஊழலில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யும்படியும் ஜெயலலிதாமேல்முறையீடு செய்துள்ளார்.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.அதனால் இவர் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று நான் நம்புகிறேன்.

தண்டனை ரத்து செய்யப்பட்டால் தீர்ப்பும் ரத்து செய்யப்படலாம். மேலும் அவர் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ்தண்டனை பெற்றுள்ளதால், தனது தண்டனையை ரத்து செய்யும்படி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இருப்பினும் அவர் தேர்தலில் போட்டியிடலாம்.

கடந்த அக்டோபர் மாதம், ஜெயலலிதாவுக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் டான்சி நிலப்பேர வழக்கில், ஊழல்தடுப்புச் சட்டப்பிரிவு 13 (1) (சி) (டி) மற்றும் 13 (2)ன் கீழும், ஐபிசி 409வது பிரிவின்படியும், ஜெயாபப்ளிகேஷன்ஸ் வழக்கில் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சசி எண்டர்பிரைசஸ் வழக்கில் 3 ஆண்டுகடுங்காவல் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது.

இந்திய தண்டைனச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்யலாம்.ஆனால் இந்த தண்டனை ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ளதால்உயர்நீதிமன்றத்தால் இந்த தண்டனையை ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+