ஓட்டு வேணுமா.. கள்ளு கொடு..
கோவை:
""மனுஷன் சாராயம் குடிக்கலாம், அதிலும் ரெம்ப பணம் கொடுத்து குடிக்கலாம், கள் குடிப்பதற்கு மட்டும் எதிர்ப்பா?சாராய சம்ராஜ்யத்திற்கென்று ஒரு "லாபி இருக்கிறது, அவர்கள் முதலாளிகள், நாங்கள் வெறும் விவசாயிகள்,கள்ளுக்கடையை திறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு என்கிறார் தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர்கிருஷ்ணசாமிக் கவுண்டர்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தென்னை விவசாயிகள் அதிகம். இந்த தென்னை விவசாயத்தைநம்பியுள்ள விவசாயிகளுகக்கு ஒரு இடியாக விழுந்தது ஈரியோபைட் எனப்படும் பூச்சி தான்.
தேங்காய்களைத் தாக்கி, அதன் வடிவத்தையே சிதைக்கும் இந்த ஈரியோபைட் நோயைக் கட்டுப் படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, இப்போது கள்ளுக்கடையை திறக்க வேண்டும் எனக்கோரிக்கையை வைக்கின்றனர் தென்னை விவசாயிகள்.
தென்னிந்திய தென்னை விவசாயிகளின் சங்கத் தலைவராக உள்ள கிருஷ்ணசாமிக் கவுண்டர் கூறுகையில்,
கடந்த ஓராண்டில் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் ஈரியோபைட் நோயால் பாதிப்படைந்துள்ளன. இந்தப்பாதிப்பைப் போக்க ஒரே வழி, கள் இறக்குவது தான். கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்ற எங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும்.
இது குறித்து முதல்வர் கருணாநதியிடம், கள்ளுக்கடை திறக்கப்படுமா என கேட்டபோது, ""அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
ஆனால் அது இனி நடக்காது. ஏனென்றால் தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதுஇயலாத காரியம். எனவே, தென்னை விவசாயிகளின் நலன் காக்க கள்ளுக்கடையை திறப்போம் என வாக்குறுதிஅளிக்கும் கட்சியினருக்கே நாங்கள் வாக்களிப்போம்.
""மனுஷன் சாராயம் குடிக்கலாம், அதிலும் ரெம்ப பணம் கொடுத்து குடிக்கலாம், கள் குடிப்பதற்கு மட்டும் எதிர்ப்பா?சாராய சம்ராஜ்யத்திற்கென்று ஒரு "லாபி இருக்கிறது, அவர்கள் பெரும் முதலாளிகள், நாங்கள் வெறும்விவசாயிகள், கள்ளுக்கடையை திறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு. சாராயத்தை விட கள் ஒன்றும்மோசமானது இல்லை.
தேங்காய் விளைச்சல் இல்லையென்றால், எண்ணெய் இருக்காது என நீங்கள் கவலைப் பட வேண்டாம். அது தான்இந்தோனேஷியா, மலேசியாவில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல வந்து கொண்டிருக்கிறதே.
கள்ளுக் கடையைத் திறப்பதைத் தவிர தென்னையைக் காப்பாற்ற மாற்று வழியில்லை. வேண்டுமானால், மிளகு,ஜாதிக்காய் போன்ற ஊடுபயிர் செய்யலாம். இதற்கும் அரசு ஊக்கமளித்து, இலவசமாகக் கன்றுகள் கொடுத்து,மானியம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு அரசு செய்யத் தவறி விட்டது. இனி அளிப்பதும் இயலாத காரியம் எனவே கள்ளுக்கடையைத் திறப்பதுஒன்றே வழி என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications