மக்களை கவர்ந்திழுக்கும் வண்டலூர் பூங்கா
சென்னை:
சென்னைக்கு 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் வண்டலூர்அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கோடை கால விடுமுறையால் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகமாகிவருகிறது.
வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்னா உயிரியல் பூங்காவில் கோடை கால விடுமுறை காரணமாகவெப்பத்தை தவிர்த்து பொழுதைக் கழிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இன்னும் இரண்டு மாதங்களுக்கு கூட்டம் அதிகமாகத்தான் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அங்கிருக்கும் செடிகளுக்கும், அங்குள்ள பிராணிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பூங்கா அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
510 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் 185 வகையான பாலூட்டிகள் வாழ்கின்றன. பறவைகள், ஊர்வன,நீரிலும், நிலத்திலும் வசிக்கக் கூடியவை,மீன்கள் உள்ளிட்ட சுமார் 2,150 உயிரினங்கள் பூங்காவில் உள்ளன.
இங்கு வசிக்கும் பிராணிகளும், பறவைகளும் கோடை வெப்பத்தின் உக்கிரம் தாங்காமல் பிரச்சனைக்கு உள்ளாகிவருகின்றன. பூங்கா அதிகாரிகள் இந்த பறவைகள், பிராணிகளை பாதுகாப்பதறகாக பல சிறப்பு ஏற்பாடுகளைசெய்து வருகிறார்கள்.
இது குறித்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குனர் கிருஷ்ணகுமார் செய்தியாளர்களிடம்தெரிவிக்கையில், தேவையான அளவு நீர் இருந்து விட்டால் பல பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். எங்களுக்குஇப்போது தேவையான அளவு நீர் இருப்பதால் பிரச்சனைகளை சமாளித்து விடலாம்.
எங்களுக்கு ஒரு நாளைக்கு 12 லட்சம் லிட்டர் நீர் தேவை. மிருகக்காட்சி சாலைக்குள் 12 கிணறுகள் உள்ளன.பாலாறு ஏரியிலிருந்து குழாய் மூலமாகவும் நீர் வருகிறது. இது எங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
இமலாயன் கருப்பு கரஐ, ஐரோப்பிய ப்ரவுன் கரடி போன்றவற்றால் கடும் வெப்பத்தை தாங்க முடியாது. அதற்காகவெப்ப நிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்கிறோம் என்றார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications