ஏப்.18 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது ம.ஜ.மு.
சேலம்:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 40 கட்சிகள் கொண்ட மக்கள் ஜனநாயக முன்னணியின்வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் 18ம் தேதி மதுரையில் தேவகவுடாவெளியிடுகிறார்.
தமிழகத்தில் மழைக்கு முளைத்த புற்றீசல் போல கிளம்பிய அரசியல் அட்சிகள், சில திராவிடக் கட்சிகளுடன்ஒட்டிக் கொண்டன. யாரும் நம்மை அழைத்துப் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் கிளம்பிய சில கட்சிகள் ஒன்றுசேர்ந்து கைகோர்த்துக் கொண்டன.
இந்தக் கட்சிகளின் பெரிய தலையாக அரசியல் அனுபவமிக்க ராஜாமுகமது தலைமை பொறுப்பேற்றார்.இவர்கள் அனைவரும் கூடி சேலத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில் உருவாகியதுநான்காவது கூட்டணி. இவர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
இது குறித்து சேலத்தில் நிருபர்களிடம் ராஜாமுகமது கூறியதாவது:
மக்கள் ஜனநாயக முன்னணியில் 45 கட்சிகள் உள்ளன. இதில் 40 கட்சிகள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரம்கோரியுள்ளன. புரட்சித் தலைவர் அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம், இந்திய மனித உரிமைக் கட்சி, தமிழ்நாடு அனைத்துக் கவுண்டர்கள் அமைப்பு ஆகியவை எங்களில்குறிப்பிடத்தக்க அமைப்புகள்.
வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். இதற்கான வேட்பாளர் பட்டியலைவரும் ஏப்ரல் 18ம் தேதி தேவகவுடா வெளியிடுகிறார். டிராக்டர் சின்னத்தில் அனைவரும் போட்டியிடுவோம்.மேலும், ஒரே தேர்தல் அறிக்கை மட்டுமே இடம் பெறும்.
அதிமுக, திமுக அணிகளுக்கு மாற்று அணியாக எங்கள் அணி செயல்படும். தாராள இறக்குமதிக் கொள்கையால்விவசாயத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் எங்களது வாக்குறுதியில் பிரதான இடம் பெறும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஆடிட்டர் பாலசுப்ரமணியம், மனித உரிமைக் கட்சியின்தலைவர் இளையபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications