சைதாப்பேட்டையில் போட்டியிடுகிறார் ராமதாசின் மகன்
சென்னை:
பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசின் மகன் டாக்டர் அன்புமணி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில்போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது பாட்டாளி மக்கள்கட்சி. பாமகவுக்கு இந்தத் தேர்தலில் 27 தொகுதிகளை வழங்கியுள்ளது அதிமுக.
அவை எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. தொகுதிகள் குறித்த விவரத்தைவியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் சென்னை அண்ணாநகர், சைதாப்பேட்டை தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் டாக்டர் அன்புமணி தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றுபாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள இளைஞர் பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், பாமக தலைமையும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications
