70 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது: சாரங்கி
திருச்சி:
தமிழகத்தில் ஓட்டளிக்க உரிமையுள்ள 4.74 கோடி மக்களில் 3.30 கோடி மக்களுக்கு புகைப்பட அடையாளஅட்டை வழங்கப்பட்டு விட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சாரங்கி தெரிவித்தார்.
அதாவது தமிழகத்தில் இதுவரை 70 சதவீத மக்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டதுஎன்றார் அவர்.
இதுகுறித்து திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் இன்னும் 30 சதவீதம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அவர்கள்,தங்களது ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வேறு ஏதாவதுதஸ்தாவேஜூகளைக் காட்டி வாக்களிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம்எழுதியுள்ளோம்.
அதற்கு தேர்தல் ஆணையத்திடமிருநது இதுவரை பதில் வரவில்லை. தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர்பட்டியல்படி, மொத்தம் 4.74 கோடி பேர் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். இவர்களில்2.36 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
இதுவரை 33 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பல காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்துநீக்கப்பட்டுள்ளன. 28 லட்சம் புதிய வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.ஏப்ரல் 26 முதல் மே 3 ம் தேதி வரை தேர்தல் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்காக 54,840வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவு மிகவும் அமைதியாக நடப்பதற்காக 101 கம்பெனிமத்திய புறக்காவல் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழகத்தில் மொத்தம் 65,000 எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. இன்னும் 4,000 எலக்ட்ரானிக்வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கத் திட்டமிட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையத்தின் வரைமுறைகளை மீறி நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் மேல்கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, சாரங்கி, திருச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், கரூர் மற்றும் அரியலூர்மாவட்டக் கலெக்டர்களுடன் சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடப்பதற்குரிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைநடத்தினார்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications