இலங்கையில் தமிழ் பெண்களை கற்பழித்தவர்கள் மேல் நடவடிக்கை
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு தமிழ் பெண்களைக் கற்பழித்த போலீஸ் மற்றும் கடற்படை வீரர்களைக் கைது செய்யக்கோரி இலங்கை சட்ட அமைச்சர் பேட்டி வீரக்கோன் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, விடுதலைப்புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த பெண்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னார்மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்பெண்கள் ஏகாம்பலம் விஜய்காலர் மற்றும் சின்னத்தம்பி சிவமணிஆகியோர் இலங்கை கடற்படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
இவர்கள் முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது இக் கற்பழிப்பு சம்பவம் நடந்தது.
இதையடுத்து இவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி மனித உரிமைக் கமிஷன் மற்றும் பல சமூக நலமையங்கள், கற்பழிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும்படியும், அவர்கள் மேல்உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இலங்கை சட்ட அமைச்சர் வீரக்கோன், இந்த கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண்களால் குற்றவாளிகள் யார் என்பதைஅடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், கற்பழிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் கர்ப்பமாக உள்ளார். அவர் ஜாமீனில் வெளியேவிடப்பட்டுள்ளார். இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன. மருத்துவச்சான்றிதழ்களும் அவர்கள் இருவரும் கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications