சரியாக தூங்காவிட்டால் அல்சர் வரும்
லண்டன்:
தூக்கமின்மை காரணமாக அல்சர் வரக்கூடும் என பிரிட்டன் மருத்துவர்கள்எச்சரித்துள்ளனர்.
அலுவலகங்களில் ஷிப்ட் முறையில் இரவு நேரங்களில் பணிபுரிவது, இரவுமுழுவதிலும் விருந்துகளில் கலந்து கொண்டு கண் விழிப்பது, நீண்டதூரம் பயணம்செல்வது, தூக்கமின்மை போன்றவை அல்சர் நோய்க்கு வழி வகுக்கும் என பிரிட்டன்மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து டாக்டர் பெலிசிட்டி மே செய்தியாளர்களிடம் கூறுகையில், வயிற்றில்சுரக்கும் அமிலங்களும், திசுக்களை வளரச் செய்யும் அமிலங்களும் சிறு குடலில்பெரும்பாலும் இரவு நேரத்தில்தான் உற்பத்தியாகின்றன.
தூக்கமின்மை காரணமாக அல்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.
டி.எப்.எப்.-2 புரோட்டினின் உற்பத்தி தூங்கும் போது 340 மடங்கு அதிகமாகிறது. இதுகுறைபாடுகளை சரிசெய்து அல்சர் வருவதையும் தடுக்கும். அல்லது செரிமானபாதையில் ஆறாமல் இருக்கும் புண்ணையும் ஆறச் செய்யும் என்றார்.
வடக்கு இங்கிலாந்தில் அமைந்திருக்கும் நீயூகாஸ்டில் பல்கலை கழக மருத்துவர்கள்நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 12 பேரிடம் குடல்வாலின் குறைபாடுகளைசரிசெய்யும் டிடிஎப்2 என்ற புரோட்டினின் அளவு எந்த விதத்தில் மாறுபடுகிறது எனசோதனை செய்தனர். அவர்கள் தூக்கமின்மை எவ்வாறு புரோட்டின் உற்பத்தியைபாதிக்கிறது எனவும் ஆய்வு செய்தனர்.
மதிய நேரத்திலும், மாலையிலும் புரோட்டின் உற்பத்தி குறைவாக இருந்தது. இரவுநேரத்தில் அவர்கள் தூங்கும் போது புரோட்டின் உற்பத்தி அதிகமாக இருந்தது தெரியவந்தது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications