மாஜி மந்திரி பொன்னுசாமிக்கு ஜெயில் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தனிநீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து முன்னாள்அமைச்சர் பொன்னுசாமி தாக்கல் செய்த வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால், அவரது மனைவி, மகள் மற்றும் உறவினருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை நீதிபதிரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்னுசாமி, வருமானத்துக்கு அதிகமாக ரூ 77 லட்சம் சேர்த்ததாகஅவர் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பொன்னுசாமிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும்அவரது மனைவி பிரபாவதி, மகள் மாலா, உறவினர்கள் வெங்கடேசன், ராஜப்பா ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டுகடுங்காவல் தண்டனையும் ரூ 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பொன்னுசாமி தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்துஇவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து அவர்களைஜாமீனில் விடுவித்தது.

இதற்கிடையே, வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் தனதுதீர்ப்பில் கூறியதாவது:

பொன்னுசாமியின் சொத்துக்கள் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை அரசுத்தரப்பினர்நிருபிக்கவில்லை. இருப்பினும் அவரது மனைவி மகள் மீது வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் தீய வழியில் வந்தபணத்தால் வாங்கப்பட்டுள்ளது என்று அரசுத்தரப்பினர் நிருபித்துள்ளனர்.

இதனால் பொன்னுசாமி மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு சந்தேகத்துக்கு இடமின்றிநிருபிக்கப்படுகிறது. அதாவது அவர் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.அதனால் அவரது தண்டனையை ரத்து செய்ய முடியாது.

அதே நேரம் அவரது மனைவி, மகள் உள்பட நான்கு பேரின் மேல்முறையீடு ஏற்கப்படுகிறது. ஏனெனில்குற்றத்துக்கு உடந்தையாக மனைவி பிரபாவதி, மகள் மாலா உறவினர்கள் வெங்கடேசன், ராஜப்பா ஆகியோர்இருந்துள்ளனர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

அதனால் அவர்களது தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அதே நேரம் அவரது மனைவி, மகள் உள்பட நான்கு பேர்நீதிமன்றத்தில் செலுத்திய அபராதத் தொகை திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்நீதிபதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+