For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

left
மதிமுக தேர்தல் சிறப்பு மாநாட்டில் 32 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்தஅறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* வசதியற்ற பொது மக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைநீக்குவோம்.

* தமிழக நதிநீர்த் திட்டங்களை நிறைவேற்றுவோம். காவிரி நிதி நீர் பிரச்னையைத் தீர்ப்போம்

* விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்களை அமல்படுத்துவோம். கொப்பரைத் தேங்காய்கொள்முதலில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையைமாற்றுவோம்.

* எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி என்ற அடிப்படைத்தேவையை நிறைவேற்றுவோம்.

* தமிழை செம்மொழியாக மத்திய அரசை அறிவிக்கச் செய்வோம். மேலும் தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக்குவோம்.

* கிராம அளவில் மக்கள் பயன்பெறும் வகையில் இன்டர்நெட், தொலைத் தொடர்பு வசதிகளைமேம்படுத்துவோம்.

* உடல் ஊனற்றோருக்கு உதவ திட்டங்கள், நெசவாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு, சிறு தொழில் வளர்ச்சி,தீப்பெட்டித் தொழிலாளர்களின் மறுமலர்ச்சி, ரப்பர் தொழிலாளர்கள் நலன் , பீடித் தொழிலாளர்களுக்கு வசதிஆகியவற்றை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம்.

* வணிகர் நலம், பொது விநியோகச் சீரமைப்பு, சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை ஆகியவற்றை கருத்தில்கொண்டு புதிய திட்டங்களை அமல்படுத்துவோம்.

* மத்திய மாநில அரசுகளின் ஒழிவு மறைவில்லாத நிர்வாகம், ஆளுநர் பதவி ஒழிப்பு, 356 சட்டப் பிரிவைநீக்குதல், மத்திய அரசின் அந்நியச் செலாவணியில் மாநில அரசிற்கும் பங்கு ஆகியவற்றிற்காக மதிமுக பாடுபடும்.

* கச்சத் தீவை மீட்டல், கடல் வழிப் போக்குவரத்து மேம்பாடு, மீனவர் நலன், கடல் வள மேம்பாடு, சுற்றுச் சூழல்பாதுகாப்புல காவல்துறை சீரமைப்பு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு பணியாற்றுவோம்.

* சாலைவிபத்திலிருந்து பாதுகாப்பு , திருக்கோயில் பாதுகாப்பு, இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்துபாதுகாத்தல், மகளிர் நலம், விளையாட்டு, வானொலி, தொலைக் காட்சி, ஆகியவற்றை மேம்படுத்துவோம்.

* அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காப்போம். சத்துணவுத் திட்டம் சுகாதாரமான முறையில்செயல்படுத்துவோம்.

* ஈழத்திலுள்ள தமிழ் மக்கள் அமைதியுடனும், மானத்துடனும், நலடனும் உரிமையுடனும் வாழ தனித் தமிழ்ஈழமே தீர்வாகும். ஈழ மக்களின் துயரம் நீங்க துணை நிற்போம்.

* அனைத்து மத நம்பிக்கைக்கும் மதிப்பளிப்போம். அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதுகாப்புஅளிக்கப்படும்.

* கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு செய்வோம்.

* சட்டமன்ற மேலவை மீண்டும் அமைப்போம். நீண்ட நெடுங்காலக் கோரிக்கையான புதுவை மாநிலம் அமையமதிமுக பாடுபடும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X