சன் டிவி அலுவலகத்தில் திடீர் தீ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவுமின்சாரக் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சன் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால் பல மணிநேரங்கள் ஒளிபரப்புதடைபட்டது.
தீ விபத்தில் பல பொருட்கள் சேதமடைந்தன. உடனடியாகத் தீயணைப்புப் படையினருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் சன் டிவி ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒளிபரப்புமீண்டும் ஞாயிறு காலை முதல் செயல்படத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications