திமுக விலிருந்து விலகிய வரதராஜன் மதிமுகவின் 127 வது வேட்பாளர்தி
Subscribe to Oneindia Tamil
கோவை:
மதிமுக வின் 127 தொகுதி வேட்பாளராக திமுகவிலிருந்து விலகிய ஏ.வி வரதராஜனை வைகோ அறிவித்தார்.
மதிமுக 213 தொகுதிகளில் போட்டியிட 126 தொகுதிகளுக்கான வேட்பாளரை கோவையில் நடந்த தேர்தல் சிறப்புமாநாட்டில் அறிவித்தது.
இதனையடுத்து, பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஏ.வி.வரதராஜன், தற்போது மதிமுகவில் இணைந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் போட்டியிட திமுக வில் சீட்கொடுக்காததால் மதிமுகவில் இணைந்துள்ளார்.
இதையடுத்து இவருக்கு பொள்ளாச்சியில் போட்டியிட மதிமுக வாய்ப்பளித்துள்ளது. இதனை வைகோதிங்கள்கிழமை கோவையில் அறிவித்தார்.
இதன் மூலம் கணிசமான ஓட்டுகள் பொள்ளாச்சியில் திமுக விற்கு குறைய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications