திமுகவிலிருந்து விலகுகிறார் பவானி தொகுதி எம்.எல்.ஏ.
பவானி:
தேர்தலில் போட்டியிட தகுதியும், பொருளாதார வசதியும் இல்லாதவருக்கு சீட் கொடுத்ததை எதிர்த்து "ஜனநாயகத்தைக் காப்பாற்றதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறார் எம்.எல்.ஏ. ஆண்டமுத்து.
பவானி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஆண்டமுத்து. இவருக்கு இந்த முறை திமுக சார்பில் போட்டியிட சீட்கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ.ஆண்டமுத்து, திமுகவிலிருந்து விலகுகிறார். இவர் திமுக தலைவர்கருணாநிதிக்கு அனுப்பியுள்ள ராஜினமாக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
பவானித் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் நான் அயராது பாடுபட்டுள்ளேன். பல ஆண்டுகளாக அதிமுகவின்பிடியில் இருந்த பவானித் தொகுதியை மீட்டு திமுக வசம் கொண்டு வந்துள்ளேன். கடந்த தேர்தலில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன்.
எனவே சிறப்பு வாய்ந்த இந்த தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவரை போட்டியிடச் செய்து எம்.எல்.ஏ.வாக ஆக்கமுடியும். இதுவே ஜனநாயக மரபு. மக்கள் செல்வாக்கு இல்லாத ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படாதது ஜனநாயகத்திற்கு முரண்பாடானசெயல்.
அதுவும் அரசியல் செல்வாக்கு, பொருளாதார வசதி, சமூகத்தில் சமமாக இல்லாத ஒருவருக்கு சீட் கொடுத்திருப்பது வருத்தத்தைஅளிக்கிறது. எனக்கு சீட் கொடுக்காவிட்டாலும், தகுதி வாய்ந்த ஒருவருக்கு இடம் கொடுத்திருந்தால், நான் அவரது வெற்றிக்குஉழைத்திருப்பேன்.
ஆனால், சாதி அடிப்படையில் நீங்கள் இடங்களை அளித்து சாதிகள் வளர ஊக்குவிப்பது தமிழகத்திற்குப் பேராபத்தாக முடியும். எனவேஜனநாயகத்தைக் காப்பாற்ற திமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன் எனக்கூறியுள்ளார் ஆண்டமுத்து.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications