வெறும் கோவணத்துடன் வந்த வேட்பாளர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கட்டிய கோவணத்துடன், கட்டை மாட்டு வண்டியில் புறப்பட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தவரை போலீசார்கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த பரபரப்புச் சம்பவம் வேட்பு மனுத்தாக்கல் துவக்க நாளான திங்கள்கிழமை ஈரோட்டில் அரங்கேறியது.ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள கொளநல்லி என்ற ஊரைச் சேர்ந்தவர் தங்கவேல் (36).

இவர் மொடக்குறிச்சியில் போட்டியிட முடிவு செய்தார். இதற்காக கடந்த ஒரு மாதமாக கோவணத்துடன் பலகிராமங்களுக்குச் சென்று ஓட்டுக் கேட்டு வருகிறார்.

விவசாயியான இவர், மஞ்சளுக்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும். விவசாயிகளின் பிரச்னைகளைஉடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும் எனக் கோரி கடந்த ஒரு மாத காலமாக இவர் மாவட்ட கலெக்டரிடம்மனுக் கொடுத்து வந்தார்.

ஆனால், இந்த மனு மீதான நடவடிக்கை எடுக்கப்படாததால் கோவணத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகம்முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் அதிகாரிகளின் சமாதானத்திற்கு பிறகுஉண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

தற்போது விவசாயிகள் சங்கத்தின் ஆதரவுடன் மொடக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.வேட்பு மனுத் தாக்கல் துவக்க நாளான திங்கள்கிழமை கட்டிய கோவணத்துடன் மாட்டு வண்டியில் புறப்பட்டார்.இவருக்கு ஆதரவாக 40 விவசாயிகள் உடன் வந்தனர்.

இதனை அறிந்த போலீசார் கோவணத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கூடாது என அறிவுறுத்தினர்.

சரி என ஒப்புக்கொண்ட தங்கவேலு, வேஷ்டியைக் கட்டினார். வேட்டி கட்டியவுடன் அவரைக் கைது செய்துபோலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விட்டனர். பின்னர் அவரை விவசாயிகள் சங்கத்தினர் ஜாமீனில்அழைத்து வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+