இன்று ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெ.
கிருஷ்ணகிரி:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை ஆண்டிப்பட்டித் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10 ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகியஇரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து திங்கள்கிழமை ஜெயலலிதா, கிருஷ்ணகிரியில்வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் பெற்றுக் கொண்டார்.
வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு ஜெயலலிதா கூறுகையில், நான் இப்போது மதுரை செல்கிறேன். மதுரையில் 18 ம் தேதி முதல்தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறேன். முதலில் செவ்வாய்க்கிழமை ஆண்டிப்பட்டியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதாகஅறிவித்திருந்தேன்.
ஆனால் தற்போது புதன்கிழமைதான் ஆண்டிப்பட்டியில் வேட்புமனுத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளேன் என்றார்.
முன்னதாக ஏப்ரல் 16 ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யும் நாள் தொடங்கியது. இது வரும் ஏப்ரல் 23 ம் தேதி வரைநடக்கிறது. வேட்புமனுக்களை பரிசீலிக்கும் நாள் ஏப்ரல் 24 ம் தேதியாகும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரு இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது வரும் 24 ம் தேதி தெரிய வரும்.
தேர்தல் ஆணைய விதிமுறைகள்படி, 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றுள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. டான்சிநிலப்பேர ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஜெயலலிதா தன்னை குற்றவாளி இல்லை என்று தீர்ப்புவழங்கும்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications