திருப்பூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் லலிதா குமாரமங்கலம்
திருப்பூர்:
![]() |
| திருப்பூரைக் கலக்கப் போகிறார் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலம். அவருக்கு உறுதுணையாக களத்தில் இறங்குகின்றனர் அவரது மகள்கள் தாட்சாயிணி மற்றும் சிவகாமி. |
பாஜக அறிவித்துள்ள ஒரே பெண் வேட்பாளர் இவரே.
இவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இரு மகள்களையும் அழைத்து வந்துள்ளார். சமூக சேவையில் கடந்த 11ஆண்டுகளாக "பிரக்ருதி என்ற அமைப்பில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் இவருக்குத் துளி கூட அரசியல்அனுபவம் இல்லை.
யதார்த்தமான பேச்சு வாக்காளர்களை கவரும் என்பதும், இவர் பெண்களோடு ஐக்கியமாக இணைந்துபணியாற்றுவார், இதற்காக அவருக்கு வாக்குகள் விழலாம் எனவும் பா.ஜ.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தங்கை தான் லலிதா குமாரமங்கலம்.
இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக அரசியிலில் ஈடுபட்டு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே. தற்போதுஇவரது குடும்பத்தில் அடுத்த அரசியல்வாதியாக லலிதா குமாரமங்கலம் உருவெடுத்துள்ளார்.
திருப்பூர் தொகுதி அறிவித்த பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தொகுதியில் முகாமிட்டுள்ளார் லலிதாகுமாரமங்கலம். முதல் கட்டமாக கட்சியினரைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
கோவையில் நிருபர்களைச் சந்தித்த லலிதா குமாரமங்கலம் கூறுகையில், இந்தியாவில் இன்னும் ஆணாதிக்கம்ஒழியவில்லை. திருப்பூர் மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பேன்.
அவர்களது வசதிக்காக திருப்பூரிலேயே தங்கப் போகிறேன். சென்னையில் நான் பிறந்து வளர்ந்திருந்தாலும்,கோவை, ஈரோடு, திருச்செங்கோடு, தர்மபுரி போன்ற ஊர்களில் எனது சொந்தங்கள் உண்டு. அங்கு அடிக்கடிவருவேன். எனவே, எந்த ஊரும் எனக்கு வேற்று ஊர் இல்லை.
எனது இரு பெண்களும் எனக்காகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். தாட்சயிணி மற்றும் சிவகாமி என்றஎனது மகள்களில் ஒருவர் புனேயில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார். ஒரு பெண்சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கிறாள்.
கடந்த இரண்டு நாட்களாக திருப்பூரில் சுற்றுப் பயணம் செய்ததில் அங்கு நல்ல குடிநீர் கிடைப்பதில்லை என்றகுறையை அறிந்தேன்.
மேலும், இங்குள்ள பெண்கள் தங்களுக்குத் தேவையான உரிமையைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.உழைக்கும் பெண்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளனர்.
இவர்களின் முன்னேற்றம் தான் எனது முதல் முயற்சியாக இருக்கும். அடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்கஎன்னால் இயன்ற அளவு பாடுபடுவேன்.
பாரதிய ஜனதாக் கட்சியில் நான் கடந்த செப்டம்பர் மாதம் தான் சேர்ந்தேன். காங்கிரஸ் பரம்பரையில் இருந்தாலும்,பிற கட்சிகளிலும் எங்கள் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணன் பா.ஜ.க.வில் இருந்தாலும், அவரது இடத்தை என்னாலோ, வேறு யாராலோ நிரப்ப முடியாது.அவருக்கு 30 ஆண்டுகால அரசியல் அனுபவம் உண்டு. எங்களுக்கு அவரின் அனுபவத்தில் துளி அளவு கூடஇல்லை என்பது தான் உண்மை.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அளவிற்கு எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. இங்குபோட்டியிடுவதே பா.ஜ.வாகப் பார்த்து என்னை தேர்வு செய்து அனுப்பியுள்ளதால்தான் என்றார்
லலிதா குமாரமங்கலத்தின் மகள் சிவகாமி கூறுகையில், எனது அம்மா எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர்கள் எடுக்கும் முடிவு நல்லதோ, கெட்டதோ, எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு.அம்மாவுக்காக இந்த தேர்தலில் நானும் எனது சகோதரியும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளோம் என்றார்.













Click it and Unblock the Notifications