தி.மு.க.வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கேட்டு கிடைக்காத எம்.எல்.ஏக்கள் தி.மு.க.விலிருந்துராஜினாமா செய்துள்ளனர்.
அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்ததற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு சீட் தரப்படவில்லை.
இதனால் வருத்தமடைந்த சில எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.விலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர்.
பவானி எம்.எல்.ஏ. ஆண்டமுத்துவுக்கு சீட் கொடுக்கப்படாமல் பவானி தொகுதி தி.மு.க. கூட்டணியில் இருக்கும்ஜாதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த ஆண்டமுத்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அனைத்துபொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
தான் விலகுவதற்கான காரணம் குறித்து தி.மு.க. தலைவருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
சென்றமுறை தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிக்கு நான் செய்தபணிகள் பற்றி நீங்கள் என்னை சட்டசபையில் பாராட்டி பேசினீர்கள். ஆனால் எனக்கு தேர்தலில் சீட்கொடுக்கப்படவில்லை.
நீங்கள் ஜாதி அமைப்புகளை ஆதரித்து வருவது எதிர்காலத்தில் தமிழகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதற்காக கட்சியிலிருந்து விலகுகிறேன் என அவர் தனது கடிதத்தில்கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்ற திருவெறும்பூர் எம்.எல்.ஏ. துரைக்கும்இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக ஒன்றிய செயலாளர் சேகரனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
துரை, தொகுதி மக்களுக்கு எந்த வித நன்மையும் செய்யவில்லை என திருவெறும்பூர் தி.மு.க.வில் கோஷ்டி பூசல்ஏற்பட்டது. மீண்டும் துரைக்கு தேர்தலில் சீட் கொடுத்தால் தாங்கள் அனைவரும் தி.மு.க.விலிருந்து விலகுவோம்என தி.மு.க.தலைமைக்கு திருவெறும்பூர் தி.மு.க. நிர்வாகிகள் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கட்சி மேலிடம் இவரிடம் அதிருப்தி கொண்டது. இதையடுத்து இந்த முறை இவருக்கு சீட்கொடுக்கபடவில்லை. இதனால் அதிருப்தியடைந்த துரை கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இது குறித்து துரை கூறுகையில், நான் கட்சி பணிகளை செய்வதில்லை என என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுஉள்கட்சி பூசல் காரணமாக கூறப்பட்ட புகார்.
இதுகுறித்து தலைமையிடம் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இதன் நகலை உள்ளாட்சித் துறை அமைச்சர்என்னிடம் காட்டினார். உள்கட்சி பூசல் காரணமாகதான் எனக்கு சீட் கொடுக்கப்பவில்லை என்றார்.
திண்டுக்கல் தி.மு.க.எம்.எல்.ஏ. மணிமாறனும் தனக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளார். இவர்மு.க.அழகிரியின் ஆதரவாளர்.
இவருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது.
தனக்கு சீட் கிடைக்காததால் வருத்தமடைந்துள்ள மணிமாறன் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக கட்சியில்இருந்து வருகிறேன். பல குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுக்கு தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தகுற்றச்சாட்டும் இல்லாத எனக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
எனக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தனித்துபோட்டியிடுவது குறித்து சிந்தித்து முடிவெடுப்போன் என்றார்.
மணிமாறனை ம.தி.மு.க.வில் சேர்ப்பதற்காக ம.தி.மு.க. நிர்வாகிகள் அவருன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாககூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications