ஆண்டிப்பட்டியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஜெ.
ஆண்டிப்பட்டி (தேனி):
தமிழக சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை பிற்பகல் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
அவரது வேட்புமனுவை ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி பெற்றுக் கொண்டார். முன்னதாக, கடந்த திங்கள்கிழமைஜெயலலிதா கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுத்தாக்கல் இந்த மாதம் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் 2ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளதால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பதில்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை பரிசீலிக்கும் நாள் இம்மாதம் 24 ம் தேதி ஆகும். இரு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல்செய்துள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது ஏப்ரல் 24 ம் தேதி தெரிந்து விடும்.
ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒற்றைப்படை எண்கள்தான் ராசி. அதனால் கிருஷ்ணகிரியில் 16 ம் தேதியும்(1+6= 7) ஆண்டிப்பட்டியில் 18 ம் தேதியும் (1+8= 9) மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications