சாப்ட்வேர் துறைக்கு முக்கியத்துவம்: திமுக தேர்தல்அறிக்கையில் உறுதி
சென்னை:
சாப்ட்வேர் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையைசெவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
1. கோவில்களின் நிர்வாகம் மேலும் செம்மையுற நடைபெறுவதற்கு, தகுந்த அதிகாரங்களுடன் கூடிய சட்டரீதியானஉயர்நிலை ஆலோசனைக்குழு அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 திருக்கோவில்களில் குடமுழுக்குநடைபெறுவதற்கேற்ப செயல்பாடுகள் வகுக்கப்படும்.
2. காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்துகாவல்நிலையங்களும் கொஞ்சம், கொஞ்சமாக கணினிமயமாக்கப்பட்டு அவைகள் மாவட்ட காவல்நிலையகன்ட்ரோல் அறையுடன் இணைக்கப்படும்.
3. தமிழகத்தைப் புதுப்பிப்போம். தமிழகத்துக்கு புதுப்பொலிவு சேர்த்தல், ஆற்றல், வேகம், விவேகம்நிறைந்தவராய் தமிழ்நாட்டினர் அவனியிலேயே தலைநிமிர்ந்து வாழ வழிவகுப்போம்.
4. ஜாதிமத பேதமற்ற சமுதாயம் அமையவும், மதநல்லிணக்கம் ஏற்படவும், சமூக நீதி கிடைக்கவும், பாடுபடும்பாட்டாளி வர்க்கம் பயன்பெறவும் திமுக பல நற்காரியங்கள் புரியும்.
5. காவிரி நதிநீர்ப்பிரச்சனையில் நடுவர் மன்ற இறுதி ஆணையை விரைவில் பெற தொடர்ந்து பாடுபடுவோம்.
6. ஏழ்மையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு பல முயற்சிகளை கடந்த ஆண்டுகளில் மேற்கொண்டது. அதைமேலும் தொடருவோம். 75 லட்சம் பேரையாவது வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டு வருவது என்ற உறுதியைதிமுக எடுத்துள்ளது.
7. திமுக ஆட்சியில் ஜாதிச்சண்டைகள் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரவுடி ராஜ்யத்தைமுற்றிலுமாகக் களைய திமுக பாடுபடும். குற்றம்புரிந்தோருக்குத் தண்டனை வாங்கித்தர அனைத்துமுயற்சிகளையும் திமுக அரசு மேற்கொள்ளும்.
8. அரிசி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வர திமுக அரசுபாடுபடும்.
9. தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்காகவும், உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காவும் தனிக்கொள்கையைஅறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகத்தை மேலும் முன்னணிக்குக்கொண்டு வர திமுக அரசு பாடுபடும்.
10. எய்ட்ஸ் நோயை ஒழித்தல், சிசு கொலையைத் தடுத்தல், போலியோ நோயை ஒழித்தல் ஆகியவற்றில் தமிழகம்முன்னணியில் உள்ளது. இந்நோய்களை முற்றிலுமாக களைய திமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications