இந்திய சாப்ட்வேர் ஏற்றுமதி குறையும்
டெல்லி:
2001-2002ம் ஆண்டிற்கான இந்திய சாப்ட்வேர் துறை ஏற்றுமதி இலக்கு (டார்கெட்) 8.5 பில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
முதலில் ஏற்றுமதி 9.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவில் பொருளாதார தேக்கம்ஏற்பட்டுள்ளதால், இந்த இலக்கு 8.5 முதல் 9 பில்லியன் டாலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என நாஸ்காம் (தேசிய சாப்ட்வேர் மற்றும் சர்வீசஸ்நிறுவனங்களின் சங்கம்) அறிவித்துள்ளது.
இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் கம்ப்யூட்டர் சேவை நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயல்படும் ஒரு அமைப்பு நாஸ்காம். இந்த அமைப்பின்தலைவரான ஃபிரோஸ் வந்த்ரேவாலா இந்திய கம்ப்யூட்டர் துறையின் ஏற்றுமதி குறித்து அளித்த பேட்டியில்,
இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதியில் 60 சதவீதம் வரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. தற்போது அமெரிக்காவின் கம்ப்யூட்டர் துறையில்நிலவும் மந்த நிலையால் இந்தியாவின் சாப்ட்வேர் ஏற்றுமதி குறையும்.
இதனை கருத்தில் கொண்டு 2001-2002 ம் ஆண்டிற்கான சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் சேவைகளுக்கான ஏற்றுமதி இலக்கு 8.5 பில்லியன்டாலர்கள் முதல் 9 பில்லியன் டாலர்களாக மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் 25 முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனங்களில் இருந்து பெற்ற தகவல்களை ஆராய்ந்த பின் நாஸ்காம் இந்த இலக்கை மாற்றி அமைத்துஉள்ளது. மேலும், நாஸ்காம் ஆய்வின் படி அமெரிக்காவில் நிலவும் மந்த நிலை ஆண்டின் பிற்பகுதியில் மாறலாம். அப்போது இந்தியாவின் சாப்ட்வேர்ஏற்றுமதி அதிகரித்து முன்பு நிர்ணயிக்கப்பட்ட 9.5 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை அடையும்.
2000-2001ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தில் 7 சதவீதத்திற்கும் மேல் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் கிடைத்தது. அடுத்தஆண்டில்(2001-2002) இது மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்தார்.
நாஸ்காம் அமைப்பின் துணைத்தலைவராக செயல்படும் ஹூயூக்ஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைவர் அருண்குமார் கூறும் போது,
அமெரிக்க பொருளாதாரத்துறையில் நிலவும் மந்த நிலையால் இந்திய சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு தங்களுடையஏற்றுமதியை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாஸ்காம் அமைப்பும் இதற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications