நிலவிற்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம்
டெல்லி:
1963ம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு மைல்கல்களை கடந்து வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தற்போது நிலவிற்கு மனிதனைஅனுப்புவது குறித்து சிந்தித்து வருகிறது.
38 ஆண்டுகளுக்கு முன்பு இதனை ஒரு கனவாக கருதியவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்ட விக்ரம் சாராபாய். அதனைதற்போது நனவாக்க முடிவு செய்துள்ளது இஸ்ரோ.
புதன்கிழமை (ஏப்ரல் 18ம் தேதி) ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் விண்வெளித்துறையில் தன்னிறைவு பெற்ற நாடாகஇந்தியா உருவெடுத்துள்ளது.
தற்போது இத்தகைய ராக்கெட்டுகளை ஏவ தேவைப்படும் கிரையோஜெனிக் என்ஜின்களை ரஷியாவிடம் இருந்து பெற்று வருகிறது இந்தியா. இவற்றைஇந்தியாவிலேயே தயாரிக்க ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது இஸ்ரோ.
அடுத்தகட்டமாக நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
2002-2003 ம் ஆண்டு முதல் கார்டோகிராபிக் செயற்கைகோள்களை ஏவப்பட உள்ளன. இந்த செயற்கைகோள்களில் பயன்படுத்தப்படும் அதிக திறன்கொண்ட கேமராக்களின் உதவியுடன் வானிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான தெளிவான புகைப்படத் தகவல்களை பெறமுடியும்.
கடந்த 38 ஆண்டுகளில் இஸ்ரோ கடந்து வந்த பாதை:
1962ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக முதன்முதலில் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய கமிட்டி அமைக்கப்பட்டது. அணுசக்தித் துறையின் கீழ் இந்தகமிட்டி செயல்படத் துவங்கியது.
அடுத்த ஆண்டிலேயே (1963, நவம்பர் 21) இந்தியாவின் முதல் ராக்கெட் "தும்பா" ஏவப்பட்டது.
1969ம் ஆண்டு இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) அமைக்கப்பட்டது.
பின்னர் 3 ஆண்டுகள் கழித்து விண்வெளி கமிசனும், விண்வெளித்துறையும் அமைக்கப்பட்டன.
இந்தியாவின் முதலாவது செயற்கைகோளான ஆரியபட்டா 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சோவியத் ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டது.
பூமியை பற்றிய ஆராய்ச்சிக்காக பாஸ்கரா 1 என்ற சோதனைமுறை செயற்கை கோள் 1979ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ரஷியாவில் இருந்து ஏவப்பட்டது.
அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோகிணி என்ற செயற்கைகோளை சுமந்து சென்ற இந்தியாவின் முதலாவது சோதனை முறை செயற்கைகோள் செலுத்துவாகனம் (எஸ்.எல்.வி), குறிப்பிட்ட வட்ட பாதையில் செயற்கைகோளை நிறுத்தத் தவறியது.
1980ம் ஆண்டு இரண்டாவது முறையாக ரோகிணி செயற்கைகோளை சுமந்து சென்ற எஸ்.எல்.வி-3 ராக்கெட்டின் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
அடுத்து மேம்படுத்தப்பட்ட வகையை சேர்ந்த எஸ்.எல்.வி-3 .ஆர்.எஸ்-டி.1 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
அதே ஆண்டு ஜூன் 19ம் தேதி ஆப்பிள் என பெயரிடப்பட்ட தகவல் தொடர்புத்துறைக்கான ஜியோ-ஸ்டேசனரி செயற்கைகோள் ஐரோப்பியாவின் ஏரியன்ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. பின்னர் நவம்பர் 20ம் தேதி சோவியத் ராக்கெட் மூலம் இந்தியாவின் பாஸ்கரா 2 செயற்கைகோள் ஏவப்பட்டது.
1982ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய தேசிய செயற்கைகோளான இன்சாட் 1ஏ அமெரிக்காவின் டெல்டா ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது.
அடுத்து 1983ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, எஸ்.எல்.வி-3 ஆர்.எஸ்-டி 2 என்ற மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள் செலுத்து வாகனம் விண்ணில்ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி அமெரிக்காவில் இருந்து இன்சாட் 1 பி செயற்கைகோள் ஏவப்பட்டது.
1984ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. முதல்முறையாக இந்திய விண்வெளிவீரர் ராகேஷ் சர்மா, ரஷியவிண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்று வந்தார்.
1987ம் ஆண்டு ஏ.எஸ்.எல்.வி. என்ற மேம்படுத்தப்பட்ட செயற்கைகோள் ஏவு வாகனத்தின் மூலம் ஸ்ராஸ் 1 என்ற செயற்கைகோளை விண்ணில்செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1988ம் ஆண்டு இந்திய தொலையுணர்வு செயற்கைகோளான ஐ.ஆர்.எஸ்.1ஏ மார்ச் 17ம் தேதி ஏவப்பட்டது.
அதே ஆண்டு ஜூலை 21ம் தேதி, ஐரோப்பியாவின் ஏரியன் ராக்கெட் மூலம் இன்சாட் 1சி செயற்கைகோள் ஏவப்பட்டது. 4 மாதங்களுக்கு பிறகுநவம்பரில் அந்த செயற்கைகோள் கைவிடப்பட்டது. அந்த ஆண்டில் ஸ்ராஸ் 2 செயற்கைகோளை ஏ.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் செலுத்தும் முயற்சி மீண்டும்தோல்வியில் முடிந்தது.
இன்சாட் 1சி செயற்கைகோள் கைவிடப்பட்டதால் இன்சாட் 1டி செயற்கைகோள் அமெரிக்காவின் டெல்டா ராக்கெட் மூலம் 1990ம் ஆணடு ஜூன்12ல் ஏவப்பட்டது.
1991ம் ஆண்டு, ஆகஸ்ட் 29ம் தேதி, இந்திய தொலையுணர்வு செயற்கைகோள் ஐ.ஆர்.எஸ்-1பி ஏவப்பட்டது.
1992ம் ஆண்டு ஏ.எஸ்.எல்.வி.ராக்கெட் மூலம் ஸ்ராஸ்-சி செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அதே ஆண்டில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இன்சாட் 2ஏ செயற்கைகோள், ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட் மூலம் ஜூலை 10ல் ஏவப்பட்டது.
மீண்டும் ஏரியன் ராக்கெட் மூலம் இன்சாட் 2பி செயற்கைகோள் 1993ம் ஆண்டு ஜூலை 23ல் ஏவப்பட்டது. அந்த ஆண்டில் இந்திய விண்வெளித்துறைமுதல்முறையாக போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள் (பி.எஸ்.எல்.வி) மூலம் ஐ.ஆர்.எஸ்-1ஈ செயற்கை கோளை விண்ணில் செலுத்த முயன்றுதோல்வியுற்றது.
1994ம் ஆண்டு ஏ.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ராஸ்-சி2 செயற்கைகோள் மே மாதம் 4ம் தேதி ஏவப்பட்டது. அக்டோபர் 15ம் தேதிஇரண்டாவது முறையாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.ராக்கெட் வெற்றிகரமாக ஐ.ஆர்.எஸ்.-பி2 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.
1995ம் ஆண்டு டிசம்பரில் இன்சாட் 2 சி மற்றும் ஐ.ஆர்.எஸ்-1சி செயற்கைகோள்கள் ஏவப்பட்டன.
1996ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ்.பி3 செயற்கைகோளை பி.எஸ்.எல்.வி.ராக்கெட் சுமந்து சென்றது.
1997ம் ஆண்டு ஜூன் மாதம் ஏவப்பட்ட இன்சாட் 2டி அதே ஆண்டு அக்டோபரில் செயலிழந்தது. பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மீண்டும் ஐ.ஆர்.எஸ்-1டிசெயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.
1999ம் ஆண்டு இன்சாட் 2ஈ செயற்கைகோள் ஏரியன் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இன்சாட் 2 வரிசையில் இது கடைசி செயற்கைகோளாகும். இதேஆண்டில் இந்திய விண்வெளித்துறை முதன்முறையாக வணிக ரீதியில் மற்ற நாடுகளின் செயற்கைகோள்களை ஏவத் தொடங்கியது.
மே மாதம் பி.எஸ்.எல்.வி -சி2 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.எஸ்-பி4 (ஓசன்சாட்) என்ற இந்திய செயற்கைகோள், கொரியாவின் கிட்சாட்-3செயற்கைகோள் மற்றும் ஜெர்மனியின் டி.எல்.ஆர்.டப்சாட் செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
2000, மார்ச் 22ல் , இன்சாட் 3 சீரிஸில், இன்சாட் 3 பி செயற்கைகோள் ஏரியன் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.
தற்போது 2001ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி இந்தியா வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications