For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 ஆண்டு வியர்வை...

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

GSLVகிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட்டை இந்தியா ஏவி சாதனைபுரிந்திருக்கிறது.

சுமார் 161 அடி உயரமுள்ள இந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கிரையோஜெனிக் எனப்படும் தொழில்நுட்பத்தில்செயல்படும் திறன் கொண்டது.

குளிர்விக்கப்பட்டு, திரவமாக்கப்பட்ட ஹைட்ரஜனையும், ஆக்ஸிஜனையும் எரிபொருளாகக் கொண்டு விண்ணில்பறந்துள்ளது ஜி.எஸ்.எல்.வி.

இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் கொண்ட ராக்கெட்டை ஏவும் திறனுடைய நாடுகளாக இதுவரை அமெரிக்கா,ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருந்து வந்தன. இப்போது இந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துவிட்டது.

இதுகுறித்து ஐ.எஸ்.ஆர்.ஓ. விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் பி.எஸ்.நாயர் கூறுகையில்,ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட்டில் பல நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் ஏவியுள்ள ஜி சாட் செயற்கைக்கோளில் இரண்டு எப் பாண்ட் மற்றும் 3 சி பாண்ட்டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இந்த செயற்கைக்கோளால் இந்தியாவிலிருந்து தென் ஆப்ரிக்கா வரையிலானபரப்பை படம்பிடிக்க முடியும் என்றார்.

இந்தியாவின் ஆப்பிள் செயற்கைக்கோள் (ஏரியன் பாசன்ஜர் பே லோட் எக்ஸ்பெரிமென்ட்) 1981 ம் ஆண்டுஜூன் மாதம் 19 ம் தேதி ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட் மூலம் ப்ரெஞ்ச் கயானாவிலிருந்து செலுத்தப்பட்டது.

1977 ம் ஆண்டு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் தொடர்பாக பல ஆய்வுகளைத் தொடங்கியது இந்தியா.பிரான்ஸ் - ஜெர்மன் கூட்டுத் தயாரிப்பான சிம்பொனி செயற்கைகோள் மூலம் பல பரிசோதனைகளைச் செய்ததுஇந்தியா.

இந்தியாவில் 1980 ஆண்டுதான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பும்பணி தொடங்கியது.

முதலில் 1980 ஜூலை மாதம் எஸ்.எல்.வி.என்ற செயற்கைக்கோளை செலுத்தியது.

GSLVபின்னர் அது ஏ.எஸ்.எல்.வி.என்ற செயற்கைக்கோளாக மேம்படுத்தப்பட்டது. (ஆக்மென்டட் சாட்டிலைட் லாஞ்ச்வெகிக்கிள்). அது 1,200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் திறன்படைத்ததாக இருந்தது. பின்னர் பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட் தயாரிப்பில் இந்தியா இறங்கியது.

ஜி.எஸ்.எல்.வியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பி.எஸ்.எல்.வி.யில் பயன்படுத்திய சில அடிப்படைஎன்ஜின்களை உபயோகப்படுத்தியது. அதாவது விகாஸ் புரோட்டோடைப் என்ற என்ஜினை இஸ்ரோவிஞ்ஞானிகள் பயன்படுத்தினர். இதுதவிர ரஷ்யாவின் கிரையோஜெனிக் என்ஜின் முக்கிய என்ஜினாகப்பயன்படுத்தப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கையில், தொழில்நுட்ப முறையில் மிகவும் நல்ல தரம் வாய்ந்தஜி.எஸ்.எல்.விராக்கெட்டை ஏவுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஜி.எஸ்.எல்.வி.யில் பயன்படுத்தப்படும்என்ஜினுக்கு மட்டுமே ரூ 5 பில்லியன் முதல் 14 பில்லியன் வரை செலவழிக்கப்பட்டது என்றனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X