ஆண்டிப்பட்டியில் ஜெ.வை எதிர்த்து சந்திரலேகா போட்டி
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஜனதாக் கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா களமிறக்கப்பட்டு உள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்த சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது. அதன் பின் ஐ.ஏ.எஸ். பதவியை துறந்தசந்திரலேகாவிற்கு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமி அடைக்கலம் அளித்து ஜனதா கட்சியின் தமிழக தலைவராக நியமித்தார்.
ஜெயலலிதா ஆட்சியின் போது அவரை எதிர்த்து வந்த சுப்ரமணிய சுவாமி அவர் மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்தார். அதன் பின் நடந்த 1996ம் ஆண்டுசட்டசபை தேர்தலின் போது அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டது ஜனதா கட்சி.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்ற பாணியில், அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சென்னைமாநகராட்சியின் மேயர் பதவிக்கு அதிமுக ஆதரவை நாடியது ஜனதா கட்சி. ஜெயலலிதாவின் ஆதரவுடன் போட்டியிட்ட சந்திரலேகா அந்த தேர்தலில்தோற்றுப் போனார்.
அதன்பின் நடந்த அரசியல் மாற்றங்களில் மீண்டும் ஜெயலலிதாவை எதிர்க்க முடிவு செய்த சுப்ரமணியசுவாமி தற்போது ஜெயலலிதாவிற்கு எதிராக ஆண்டிப்பட்டிதொகுதியில் சந்திரலேகாவை நிறுத்துகிறார்.
சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஜனதாக் கட்சியின் அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்குபாரதிய ஃபார்வர்டு பிளாக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது ஜனதா கட்சி.
இக்கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் 30 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் ஜனதா கட்சி போட்டியிடுகிறது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரலேகா போட்டியிடுவார். வருகிற ஏப்ரல் 20ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்கிறார் சந்திரலேகா.
ஜனதா கட்சி போட்டியிடும் தொகுதிகள் -
1. வேலூர்
2. ஓமலூர்
3. தொண்டாமுத்தூர்
4. பெருந்துறை
5. ஊட்டி
6. ஆத்தூர்
7. சேடப்பட்டி
8. திருமங்கலம்
9. உசிலம்பட்டி
10. சோழவந்தான்
11. திருப்பரங்குன்றம்
12. மதுரை மேற்கு
13. மதுரை கிழக்கு
14. மதுரை மத்தி
15. சமயநல்லூர்
16. மேலூர்
17. தொட்டியம்
18. திருச்சி - 2
19. பட்டுக்கோட்டை
20. புதுக்கோட்டை
21. திருப்பத்தூர்
22. பரமக்குடி
23. கடலாடி
24. ஒட்டப்பிடாரம்
25. சங்கரன்கோவில்
26. வாசுதேவநல்லூர்
27. ஆண்டிப்பட்டி
28. வால்பாறை
29. லால்குடி
30. ஸ்ரீரங்கம்
பாண்டிச்சேரி :
1. குருவிநத்தம்
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications