சொந்தக்காரர்களுக்கு சீட் கொடுக்கும் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் மஞ்ஜினி உள்பட பல நிர்வாகிகள் கூண்டோடு விலகி விட்டதால் அங்கு பாட்டாளி மக்கள்கட்சி ஆட்டம் கண்டுள்ளது.
வன்னியர் சமுதாயக் கட்சி என்ற முத்திரையுடன் கூடிய கட்சியாக உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பாண்டிச்சேரியில்கலகலத்துப் போயுள்ளது. அங்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டனர். தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் அதிருப்தியடைந்து அவர்கள் விலகி விட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவராக இருந்து வந்த மஞ்ஜினி எம்.எல்.ஏ. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்துவிலகி சமீபத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார். அதே போல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்இருந்த எம்.எல்.ஏவான சங்கரனும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்தார்.
கட்சியிலிருந்து விலகியதால் எம்.எல்.ஏ. பதவியை இழந்தவர் மஞ்ஜினி என்பது குறிப்பிடத்தக்கது.பாண்டிச்சேரியில் ஓரளவு செல்வாக்கு படைத்தவர்.
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. மொத்தம் 10தொகுதிகளில் பா.ம.க. போட்டியிடுகிறது. ஆனால், வேட்பாளர் தேர்வில் பெரும் குழப்பம் துவங்கியது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உறவினர்கள் மற்றும் புதுமுகங்கள் தான் வேட்பாளர் தேர்வில் அதிகமுக்கியத்துவம் பெற்றனர். நெட்டப்பாக்கம் தொகுதியில் ராமதாசின் உறவினர் தன்ராஜ் என்பவர் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார். இவர் கல்லூரிப் பேராசிரியர்.
பா.ம.க. வெற்றி பெற்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் இவர்தான் முதல்வராகப் பதவி ஏற்பார் என்றுகூறப்படுகிறது.
இதேபோல, அரியாங்குப்பம் என்ற தொகுதியில், ஆனந்தராமன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் ராமதாஸ்உறவினர். இத் தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்றது. இதில் மட்டுமேஅப்போது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ராமதாஸ் சொந்தக்காரர்களாகவும், புதுமுகங்களாகவும் இருந்ததால் மஞ்ஜினி உள்பட பலரும் அதிருப்தி அடைந்தனர். மேலும் கட்சி தாவி பாமகவில்சேர்ந்து அதை வலுப்படுத்திய தம்மைக் கண்டுகொள்ளவில்லை என்று மஞ்ஜினியும், சங்கரனும் ஆத்திரமடைந்தனர்.
தங்களை அலட்சியப்படுத்திய ராமதாஸுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில், கட்சியை விட்டு விலகினர்.அவர்களோடு முக்கிய நிர்வாகிகள் அனைவரும் விலகி விட்டனர். கிட்டத்தட்ட பாண்டிச்சேரியில் இப்போதுபாட்டாளி மக்கள் கட்சியே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
நிர்வாகிகள் விலகலால், பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி பெரும் பாதிப்புள்ளாகியுள்ளது. வரும் தேர்தலில்இது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், பாண்டிச்சேரியில் வலுவான கட்சியாக உள்ள காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணிக்குஇது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதிமுக மறைமுகமாக மகிழ்ச்சியடைந்துள்ளது.இதன்மூலம், முதல்வர் பதவியை முடிந்தவரை முதலிலேயே தட்டிப் பறிக்க அதிமுக முயலும் என்று கூறப்படுகிறது.
மேலும், தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்காது என்றும் அது கணக்குப் போடுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி குழப்பத்தால் மகிழ்ச்சியடைந்துள்ள இன்னொரு கட்சி காங்கிரஸ். தங்களுக்குத் தொகுதிகள்தராமல் கேவலப்படுத்திய கட்சி இப்போது இல்லை என்ற நிலை உருவாகி விட்டதை அவர்கள் மகிழ்ச்சியோடுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு இப்போதே வெற்றி கிடைத்து விட்டதாக கூறி வருகிறார்கள்.
மஞ்ஜினி விலகலால் பாதிப்பு இருக்குமா என்பதை வரும் தேர்தல் தெளிவுபடுத்தும்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications