திருப்பதியில் டெண்டுல்கர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

பி.சி.சி.ஐக்கு எதிராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாரூதின்தொடர்ந்த வழக்கில், மேட்ச் பிக்சிங் வழக்கு விசாரணை அறிக்கையை ஜூன் 25ம்தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு பி.சி.சி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதீன் மேட்ச் பிக்சிங்கில்ஈடுபட்டிருந்ததாக கூறி ஆயுட்காலம் முழுவதும் அவர் கிரிக்கெட் விளையாடக்கூடாதுஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தடை விதித்தது.

இந்த தடையை எதிர்த்து சென்ற ஜனவரி மாதம் 29ம் தேதி அசாருதீன், வழக்குதொடர்ந்தார்.

வழக்கு நடந்து வரும் நிலையில் அசாருதீனின் வழக்கறிஞர் திம்மண்ண ஜெகதீஷ்தற்போது மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் முன்னாள் சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் மாதவனை விசாரணைகமிஷனராக நியமிக்க பி.சி.சி.ஐ.எடுத்த தீர்மானம் குறித்த அறிக்கையையும், மாதவன்பி.சி.சி.ஐயிடம் சமர்ப்பித்த விசராணை அறிக்கையையும் தர வேண்டும் எனகோரியிருந்தார்.

அசாருதீனின் வழக்கறிஞர் மொத்தம் மூன்று மனுக்கள் தாக்கல் செய்துள்ளார் அதில்அசாருதீனை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் எனவும். அவர் மீது விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால தடையை நீக்கவேண்டும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு சிவில் நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதிபதி ஷியாம் சுந்தர ராவ்முன் ஏப்ரல் 16ம் தேதி விசாரணைக்கு வந்தது.

பி.சி.சி.ஐ. வழக்கறிஞரின் வாதங்களுக்கு எதிராகவும், மாதவனின் வழக்கறிஞரின்வாதங்களுக்கு எதிராகவும் ஜகதீஷ் கூறிய வாதங்களை நீதிபதி கேட்டறிந்தார். அதன்பின் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

மேலும் மேட்ச் பிக்சிங் குறித்த விசாரணை அறிக்கையை ஜுன் மாதம் 25ம் தேதிக்குள்சமர்பிக்குமாறு பி.சி.சி.ஐக்கு உத்தரவிட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+