கருணாநிதி ஓட்டல் முன் தி.மு.க.தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி:
முன்னாள் எம்.பிக்கு முசிறி தொகுதியை ஒதுக்க வேண்டும் என தி.மு.க. தொண்டர்கள்கருணாநிதி தங்கியிருந்த ஓட்டல் அறை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் செல்வராஜ். முசிறிதொகுதி தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என செல்வராஜ் கேட்டு வந்தார். ஆனால்செல்ராஜுக்கு பதிலாக விவேகானந்தன் என்பவரை வேட்பாளராக தி.மு.க.அறிவித்துள்ளது.
இதற்கு செல்வராஜின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.விவேகானந்தன் புதிகாக கட்சியில் இணைந்தவர், மேலும் அவர் மீது பல வழக்குகள்உள்ளதால் அவரை நீக்கி விட்டு செல்வராஜுக்கு முசிறி தொகுதியை ஓதுக்க வேண்டும்என செல்வராஜின் ஆதரவாளர்கள் கோரிவருகின்றனர்.
இந் நிலையில் தனது முதல் கட்ட தேர்தல் பிராசாரத்தை முடித்தபின்பு திருச்சி வந்துதங்கியிருந்தார் கருணாநிதி. செல்வராஜுக்கு முசிறி தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவலியுறுத்தி செல்வராஜின் ஆதரவாளர்கள் கருணாநிதி தங்கியிருந்த ஓட்டல் முன்புஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்தது. அங்கு காவலில் இருந்தபோலீசார் முதல்வரை சந்திக்க செல்வராஜுக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்துஆர்ப்பாட்டக் கும்பல் அமைதியடைந்தது.
செல்வராஜ் முதல்வரை சந்தித்து தனக்கு முசிறி தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் எனமனு கொடுத்தார்.
அதன்பின் அவர் தன் ஆதரவாளர்களிடையே பேசினார். இதன் பின்ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
செல்வராஜுக்கு முசிறி தொகுதியை ஒதுக்குவது பற்றி பரிசீலனை செய்வதாகவும்,கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனுடன் பேசி முடிவெடுப்பதாகவும் முதல்வர்செல்வராஜிடம் கூறியதாக தெரிய வந்துள்ளது.
நிருபர்களிடம் கருணாநிதி கூறுகையில், முதல் சுற்று தேர்தல் பிரசாரத்தின் போதுமக்களின் ஆதரவு அமோகமாக காணப்பட்டது இதனால் தேர்தலில் தி.மு.க. அமோகவெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications