நான் த.மா.கா.வை கைப்பற்றவில்லை: சிதம்பரம்
சேலம்:
நான் தமிழ் மாநில காங்கிரசை கைப்பற்றவும் இல்லை, கால் பற்றவும் இல்லை என சேலத்தில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர்ப.சிதம்பரம், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறேன். அவர்கள் என்னோடு இணைந்து செயல்பட்டு திமுக ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை இதுவரை 2500 செயல்பட்டு வருகின்றன. தினம் 100பேரவைகள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் இது 3000த் தை தாண்டி விடும்.
திமுக கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை எனக் கூறுவது தவறு. இந்த அணியில் உள்ள பாரதியஜனதாக் கட்சிதான் இந்தியாவில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தக் கூட்டணியில் ஜாதிக் கட்சிகள் இருப்பதாகக்கூறுகின்றனர். ஆனால், கடந்த 99ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகளைமூப்பனார் ஆதரித்து அரவணைக்கவில்லையா?
திமுக ஆட்சியில் பணப்புழக்கம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இதற்கு மாநில அரசு எந்த விதத்திலும்பொறுப்பல்ல. இதனை மத்திய அரசும், ரிசர்வ் பாங்க்கும் தான் சரி கட்ட வேண்டும்.
வரும் தேர்தலில் திமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது குறித்து என்னால் ஆருடம்சொல்லமுடியாது. நான் தமிழ் மாநில காங்கிரசைக் கைப்பற்றவும் இல்லை. கால் பற்றவும் இல்லை என்றார்சிதம்பரம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications