ஜெ.தேர்தலில் போட்டியிட முடியுமா? சாரங்கி பதில்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும், நிராகரிப்பதும் அந்தந்த தொகுதியின்தேர்தல் அதிகாரிகளின் கையில் உள்ளது என்று தமிழக தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி சனிக்கிழமைதெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 20 ம் தேதி வரை 700 பேர்வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத்தாக்கல் வரும் 23 ம் தேதியுடன் முடிவடைகிறது. 23 ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள்பெற்றுக் கொள்ளப்படும்.
24 ம் தேதி காலை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.
தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக்டர்களுக்கு அனுப்பிவைக்கப்பட ஆரம்பித்து விட்டன.
தேர்தலில் அதிக அளவு மத்திய அரசு பணியாளர்களை ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதனால்இந்த சட்டசபைத் தேர்தலில் அதிக அளவு மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளோம்.
அவர்களுக்கு வரும் 29 ம் தேதி தொடங்கி 3 கட்டமாகப்பயிற்சி அளிக்கப்படும். தனியார் டிவிக்களில் விளம்பரம்செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியுமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஏனெனில்வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை ஏற்றுக் கொள்வதும், நிராகரிப்பதும் சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரிகளின் கையில்தான் உள்ளது.
இரண்டு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்துள்ள ஜெயலலிதாவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் அந்த இரண்டுதொகுதிகளிலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்துசம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயலலிதா பொதுமக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்டதாக எனக்கு எந்தப்புகாரும் வரவில்லை என்றார் சாரங்கி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications