கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

ஜெயலலிதா மனுத்தாக்கல் செய்துள்ள கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணனுக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. மக்கள்பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடக்கூடாது.

இந்த நிலையில் தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கிருஷ்ணகிரி மற்றும்ஆண்டிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா.

அதனால் ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்கப்படுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல்தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் சென்னைஉயர்நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேட்புமனுவை கிருஷ்ணகிரியில் தேர்தல் அதிகாரி மதிவாணனும்,ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரி ஜெயாவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், வேட்புமனு பரிசீலனையின் போது ஜெயலலிதாவின் வேட்புமனுவை நிராகரிக்கக்கூடாது. அப்படிநிராகரித்தால் உங்களது குடும்பத்தையே அழித்து விடுவோம் என்று கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரிமதிவாணனுக்கு தபாலில் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் ஜெயலலிதாவின் வேட்புமனுவைநிராகரித்தால் அலுவலகம் முன் தீக்குளிப்போம் என்றும் எழுதப்பட்டுள்ளது.

தபாலில் அனுப்பியவர்கள் முகவரி இல்லை. கொலை மிரட்டல் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான தர்மபுரிமாவட்ட கலெக்டர் ராஜேந்திரகுமாரிடமும், கிருஷ்ணகிரி போலீஸ் டி.எஸ்.பி.பகலவனிடமும், தமிழக தேர்தல்அதிகாரி சாரங்கியிடமும் மதிவாணன் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூர் ரோட்டில் உள்ள பயணியர் மாளிகை அருகே வசித்து வரும் தேர்தல் அதிகாரிமதிவாணன் வீட்டிற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தக் கொலைமிரட்டலால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+