மகனுக்கு ஆதரவாக நம்பியார் பிரசாரம் செய்வாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருச்சி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிடும் சுகுமாறன் நம்பியாருக்குஆதரவாக பிரசாரம் செய்ய அவரது தந்தையும், பிரபல வில்லன் நடிகருமான எம்.என்.நம்பியாரை வரவழைக்கமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி தொகுதி எம்.பியாக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததால், அங்கு இடைத் தேர்தல்நடைபெறுகிறது. ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டிக்குத்தான் இந்தத் தொகுதி வழங்கப்படும் என்றுகூறப்பட்டது. ஆனால் அவருக்குப் பதில், சென்னை மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுகுமாறன் நம்பியார்வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார்.

சுகுமாறன் நம்பியார், வில்லன் நடிகர் நம்பியாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா எனமுக்கிய அரசியல் தலைவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ள நம்பியார் இதுவரை நேரடியாகவும்,மறைமுகமாகவும் அரசியலில் ஈடுபட்டதில்லை. அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும் அவர் பலமுறைகூறி வந்திருக்கிறார்.

இந்த முறை அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்தலில் நிற்பதால், நம்பியாரை பிரசாரத்தில் ஈடுபடுத்தினால்நல்ல பலன் இருக்கும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதப்படுகிறது. எனவே சுகுமாறன் நம்பியாருக்கு ஆதரவாகநம்பியாரை பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. தரப்பில் யற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் இதுவரை நம்பியார் சாதகமான பதில் தரவில்லை என்று தெரிகிறது.

அதே சமயம், தனது தந்தை பிரசாரம் செய்ய வேண்டியதில்லை எனவும், தன்னால் அங்கு வெற்றி பெற முடியும்என்றும் சுகுமாறன் நம்பியார் கருதுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் வாஜ்பாய்க்கு உள்ள நல்ல பெயர், பாரதீயஜனதாக் கட்சியின் சமீபத்திய செல்வாக்கு, ரங்கராஜன் குமாரமங்கலம் மீது தொகுதியில் உள்ள நல்ல பெயர்ஆகியவை தனது வெற்றிக்குப் போதுமானவை என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, சுகுமாறன் நம்பியார், ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டியவர், அவருடன் படித்தவர். எனவேஅவருக்கு எதிராக தலித் எழில்மலையை நிறுத்தியிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. தலித் எழில்மலை தொகுதிக்குப்புதியவர், சுத்தமாக எந்த செல்வாக்கும் இல்லாதவர். எனவே சுகுமாறன் நம்பியாரின் வெற்றிக்கு இடையூறுஏற்படாத வகையில் ஒரு வேட்பாளரை அவர் நிறுத்தியிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் மன வருத்தம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+