அமைதியாய் இருங்கள்: தொண்டர்களுக்கு ஜெ. அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் அ.தி.மு.கவினர் அமைதி காக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கயிைல் அவர்கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிப்பட்டியில் நான் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா? இல்லையாஎன்பது பற்றி தெரியாத நிலையில், எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிடும் என வதந்தி பரப்பிவிடப்பட்டுவருகிறது.

எனக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடமிருந்தே எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

வாக்காளர் மத்தியில் அ.தி.மு.கவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இது போன்ற திட்டங்கள்தீட்டப்படுகின்றன.

வேட்புமனு நிராகரிக்கப்படும் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது தி.மு.க.. இதன்மூலம் பஸ் எரித்தல், பலரை உயிருடன் எரித்தல் போன்ற சம்பவங்களில் தி.மு.கவினர் ஈடுபட்டு அந்த பழியைஅ.தி.மு.கவினர் மீது போட உத்தரவு போடப்பட்டுள்ளது இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது. மக்கள் நம்பக்கம் இருப்பதால் எது நடந்தாலும் கழக உடன்பிறப்புக்கள் அமைதி காக்க வேண்டும்.

மக்கள் ஆதரவுடன் என் தலைமையில் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைக்கப்படும் என்ற உறுதியுடன் கழக உடன்பிறப்புகள் பணியாற்றி வருகிறார்கள்.

என் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் என் அன்பு கட்டளையை ஏற்று நடப்பார்கள். எனவே எந்தவிதமான அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தி.மு.கவினர்தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும் எனகூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+