டிவி பார்க்க தடை: கல்லூரி மாணவி தற்கொலை
திருநெல்வேலி:
டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்.
இது குறித்து போலீசார் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மகள்சங்கரி (வயது 19) பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ.முதலாமாண்டு படிந்து வந்தார்.
இவருக்கு டிவி பார்ப்பது பிடித்த பொழுதுபோக்கு. தற்போது செமஸ்டர் தேர்வுக்காக கல்லுரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆனால் சங்கரி தேர்வுக்கு படிக்காமல் தொடர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது தாய் ராஜேஸ்வரி, படிக்காமல் டிவி பார்துத்கொண்டிருக்கிறாயே என கடிந்து கொண்டார்.
இதனால் மனவருத்தம் கொண்ட சங்கரி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டுக் கொண்டார்.
அப்போது அருகில் உள்ள வீட்டில் சங்கரிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த வீட்டில் உள்ளவர்கள் சங்கரியை அழைக்க வந்தபோதுசங்கரி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்தனர்.
உடனே சங்கரி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும்வழியிலேயே சங்கரி இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள் என்றனர்.












Click it and Unblock the Notifications