சிறப்பாக நடந்தது ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடந்தது. லட்சக்கணக்கானபக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று ஆன்மீகப் பெரியோர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரெங்கநாதர் கோவில் சித்திரைத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் 9ஆம் நாளான ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து தேருக்குப் புறப்பட்ட ஸ்ரீரங்கநாதர், 4 மணி முதல் 5.15மணி வரை மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
காலை 6.05 மணிக்கு ஸ்ரீரங்கநாதர் வீற்றிருந்த தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
நான்கு சித்திரை வீதிகளையும் வலம் வந்த தேர் காலை 9.50 மணிக்கு நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள்எழுப்பிய "கோவிந்தா "கோவிந்தா என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
பின்னர் 3.15 மணிக்கு தேரில் சவாரி செய்தவாறே நம்பெருமாள் ரேவதி மண்டபத்தை அடைந்தார். பின்னர்திருமஞ்சனம் கண்டருளிய ஸ்ரீரங்கநாதர் இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications