நாங்க தான் முதல்ல...வைகோ
திருச்சி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதலில் சேர்ந்தது மதிமுக தான். இதன் பின்னர் தான்திமுக சேர்ந்தது. இதனால் அந்தக் கூட்டணியிலிருந்து மதிமுகவை வெளியேற்றமுடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில்,
மக்கள் நலனுக்காகவும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்தான்நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம்.
தமிழக மக்கள் அதிமுக-திமுக ஆட்சிகளைப் பார்த்து விட்டனர். இந்த அரசுகளின்செயல்பாடுகளினால் மக்கள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்.
ஆட்சி மாற்றத்தை மக்கள் வெகுவாக விரும்புகிறார்கள். எனவே மதிமுக ஆட்சிஅமைக்க மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுகதான் முதன் முதலில் சேர்ந்தது. அதன்பிறகுதான் திமுக வந்து சேர்ந்தது. அதனால் கூட்டணியைவிட்டு மதிமுகவை வாஜ்பாய்வெளியேற்ற மாட்டார் என்று கருதுகிறேன் என்று கூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications