For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுக்கு ஆதரவாக "சித்தி பிரச்சாரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து "சித்தி புகழ் நடிகை ராதிகா பிரசாரம்செய்யவுள்ளார்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாயலத்திலிருந்து இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை ராதிகா 11 நாட்கள் பிரசாரம் செய்யவுள்ளார்.அவரது சுற்றுப்பயண விவரம்:

26-ம் தேதி சென்னைப் புறநகரான பாடியில் தனது பிரசாரத்தைத் துவக்குகிறார் ராதிகா. அங்கிருந்து திருமங்கலம்,அம்பத்தூர், வில்லிவாக்கம், ஆவடி, திருவள்ளூர் வழியாக சோளிங்கரில் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

27-ம் தேதி மாலை 6 மணிக்கு திருவான்மியூரில் மீண்டும் தனது பிரசாரத்தைத் தொடங்கும் ராதிகா, அங்கிருந்துசோழிங்கநல்லூர், திருப்போரூர், மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தில்முடிக்கிறார்.

29-ம் தேதி பெரம்பூரில் தனது பிரசாரத்தைத் தொடரும் ராதிகா, மாதவரம், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர்,கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

30-ம் தேதி மரக்காணம், கூளிமேடு, கோட்டக்குப்பம் மற்றும் பாண்டிச்சேரியில் பிரசாரம் செய்கிறார்.

1-ம் தேதி மதுரை மாவட்டத்தில் ராதிகா பிரசாரம் செய்கிறார். திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி,ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர், தேனி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர் அன்று இரவுதிண்டுக்கல்லில் தங்குகிறார்.

2-ம் தேதி பழனியில் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்குகிறார். அங்கிருந்து உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி,கிணத்துக்கடவு, கோவையில் பிரசாரம் செய்கிறார்.

3-ம் தேதி கோவை புறநகரான சூளூர், பல்லடம், பொங்கலூர், காங்கேயம், வெள்ளக்கோவில், கரூர், முசிறி,மண்ணச்சநல்லூர், டோல்கேட், திருச்சி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

5-ம் தேதி மணப்பாறை, மேலூர், கொட்டாம்பட்டி, மதுரை, கே.புதூர், செல்லூர், ஆரப்பாளையம், அரசரடி,மேலமாசி வீதி, ஜீவாநகர், ஜெய்ஹிந்துபுரம், கீரைத்துரை, காமராஜபுரம், தினமணி தியேட்டர், சிவகங்கை ஆகியபகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

6-ம் தேதி நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர், கீழச்சேவல்பட்டி, திருமயம் ஆகியஇடங்களில் பிரசாரம் செய்கிறார். அன்று இரவு தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இரவுதஞ்சையிலேயே தங்குகிறார்.

7-ம் தேதி நீடாமங்கலம், திருவாரூர், கீவலூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டனம், பூம்புகார், சீர்காழி,வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விக்கிரவாண்டி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம்செய்வார்.

8-ம் தேதி உளுந்தூர்ப்பேட்டை, திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டு தனதுதேர்தல் பயணத்தை நிறைவு செய்கிறார் ராதிகா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X