தண்ணீர் சண்டையில் பெண் மீது ஆசிட் வீசி தாக்கிய இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண்ணின் மீது ஆசிட் வீசிய
தாய் - மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் காங்கேயம் ரோட்டில் குடியிருந்து வருபவர் கண்ணன் (38). இவரது மனைவிகலைச் செல்வி (31). இவர்களுக்கும் இவரது வீட்டிற்கு எதிரே குடியிருந்த மேரி (55).அவரது மகன் ஆசிர்வாதம் (27) ஆகியோருக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில்தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறையடுத்து கலைச் செல்வி மீது ஆசிர்வாதம், மேரி ஆகிய இருவரும்ஆசிட்டை வீசினர். இதில் கலைச் செல்விக்கு கழுத்திலும் முகத்திலும் காயம்ஏற்பட்டது.
அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேரி மற்றும் ஆசிர்வாதம்ஆகியோரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications