கற்பழிப்பு: 5 ஒரிஜினல் அரசியல்வாதிகள் கைது
திருப்பூர்:
வேட்பு மனு தள்ளுபடியானதால், மனுவை பூர்த்தி செய்து கொடுத்தவரின் மனைவியை வேட்பாளர் உட்பட 5 பேர் கற்பழித்ததாககைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் அருகே உள்ள பூளவாடி சுகுமார் நகரைச் சேர்ந்தவர் அமானுல்லா. இவரும் தாராபுரத்தைச் சேர்ந்த ராயப்பன் (37)என்பவரும் சேர்ந்து இந்திய மக்கள் சமூக நலவாழ்வு இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினர்.
இந்த அமைப்புக்கு பழனிச்சாமி பொதுச் செயலராகவும், ராயப்பன் இணைச் செயலருமாக பொறுப்பு வகித்தனர். துணைத்தலைவராக ஆறுமுகம், நிர்வாகக் குழு உறுப்பினராக முததுச்சாமியும் இருந்தனர். இவர்கள் அனைவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து திருப்பூர் தொகுதியைத் தேர்வு செய்தனர். அந்த தொகுதியில் பழனிச்சாமியைவேட்பாளராக முடிவு செய்து வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுவை ராயப்பன் நிரப்பிக் கொடுத்துள்ளார். ஆனால், இந்தவேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் காரணம் கூறி மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.
இதனால் பழனிச்சாமி மனு பூர்த்தி செய்து தந்த ராயப்பனை திட்டினார், மிரட்டினார். உன்னால் தான் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு நீதான் காரணம் எனக் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு ரூ. 50 ஆயிரம்வரை செலவு செய்துள்ளேன். அதனை நீ தான் திருப்பிக் கொடு எனக் கூறி மிரட்டியுள்ளார்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் அதற்குப் பதில் தனக்கு உள்ள ஒரு நிலத்தை பழனிச்சாமிக்கு மாற்றி ழுதித் தர ராயப்பன்ஒப்புக் கொண்டார். இதற்காக ராயப்பனும் அவரது இரண்டாவது மனைவி தனலட்சுமியும் (33) காரில் தாராபுரம் செல்லப்புறப்பட்டனர்.
இந்த காரில், அமனுல்லா, முத்துச்சாமி, ஆறுமுகம் ஆகியோரும் சென்றனர். காரை துரைசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். ஆனால்கார் தாராபுரம் செல்லாமல் அவிநாசியை நோக்கிச் செல்லத் தொடங்கியது.
அவர்கள் தனலட்சுமியையும், ராயப்பனையும் மிரட்டி காடுவெட்டிபாளையம் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்குராயப்பனை அடித்து உதைத்துள்ளனர். அவரைக் கட்டிப் போட்டு விட்டு காரில் இருந்த தனலட்சுமியை ஆறுமுகமும், துரைசாமியும்கற்பழித்துள்ளனர்.
பின்னர் அவர்களை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அங்கிருந்து திரும்பி ஊருக்கு வந்த ராயப்பன் தனக்கும் தன் மனைவிக்கும்நேர்ந்த கொடுமை பற்றி ராயப்பன் அந்த ஊர் மக்களிடம் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில்குற்றவாளிகளை போலீசார் தேடி கண்டு பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி, அமானுல்லா, முத்துச்சாமி, ஆறுமுகம், கார் டிரைவர் துரைசாமி ஆகியோரைப் போலீசார்கைது செய்தனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications