ஜெயலலிதாவின் பேராசை பெருநஷ்டமானது- கருணாநிதி கிண்டல்
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
கிருஷ்ணகிரியில் திமுககூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி பேசியதாவது:
கடந்த 10 நாட்களாக நான் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். செல்லும் இடங்களில் எல்லாம், இரவு 10மணிக்குமேல் பிரச்சாரம் செய்யக் கூடாது, கிராமப்புறங்களில் இரவு 11 மணிக்குமேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றவிதிமுறையை நான் மீறாமல் கடைபிடித்து வருகிறேன்.
ஆனால், அவ்வாறு நான் பிரச்சாரத்தை உரிய நேரத்தில் முடிக்கவில்லை என பொய்க்கே இலக்கணமான ஜெயலலிதாசொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
தேர்தல் விதிமுறைகள் தெளிவாக இருந்தும் நான்கு இடங்களில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். இது ஏன் என புரியாமல்பத்திரிக்கைகள் கூட திணறுகின்றன. படிக்காத பாமரனுக்கும் கூட தெரியும் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடக் கூடாதுஎன்று. ஆனால் ஆங்கிலக் கல்வி பயின்ற ஜெயலலிதாவுக்கு இது கூடவா தெரியாமல் போனது.
காரணம் ஒன்றுமல்ல, கிருஷ்ணகிரியில் என்னாச்சு, ஆண்டிபட்டியில் என்னாச்சு என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்வேளையில், தேர்தல் கமிஷனை ஏமாற்றி போட்டியிடலாம் என திட்டமிட்டிருந்தார் அவர்.
ஆனால் சிக்கிக் கொண்டார். பேராசை பெருநஷ்டமானது. தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போதும் நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆளாளுக்கு முதல்வர் என்று யார் வேண்டுமானாலும்கூறலாம். ஆனால், ஜெ, நிச்சயமாக தல்வராக மாட்டார். முதல்வர் ஆகும் அளவிற்கு அவரது கூட்டணியினர் வெற்றி பெறமாட்டார்கள்.
நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். தமிழகத்தில் 183 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போவது திமுக தான். தோழமைக் கட்சிகளான புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள்,தலித் விடுதலை இயக்கம் நமது வலது இடது கரங்களாக உள்ளன என்றார் முதல்வர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications