வேட்பு மனு வாபஸ் முடிந்தது .. கருணாநிதி தொகுதியில் 10 பேர் போட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை வாபஸ்பெறுவதற்கான காலக்கெடு வியாழக்கிழயுடன் முடிவடைந்தது.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி சட்டசபைகளுக்கு மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.அத்தோடு, திருச்சி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கியது. ஜெயலலிதா நான்குதொகுதிகளில் மனுத்தாக்கல் செய்து புதுமை படைத்தார். அவர் உள்பட மொத்தம் 2827பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை 24-ம் தேதி நடந்தது. ஜெயலலிதாவின் நான்கு மனுக்கள்உள்பட 758 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திருச்சியில் 2 மனுக்கள்தள்ளுபடியாகின.

இதையடுத்து வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 2 நாட்கள் அவகாசம்கொடுக்கப்பட்டது. அந்த அவகாசம் வியாழகிழமை மாலை 3 மணியுடன் முடிந்தது.

வேட்பு மனு வாபஸ் முடிவுக்குப் பின் சென்னை நகர் மற்றும் புறநகர் தொகுதிகளில்உள்ள வேட்பாளர்கள் விவரம்:

  • சேப்பாக்கம்

    மு.கருணாநதி (திமுக).

    ஆர்.தாமோதரன் (காங்கிரஸ்).

    தமிழ்மறவன் (மதிமுக) மற்றும் 7 சுயேச்சைகள்.

  • ஆயிரம் விளக்கு

    மு.க.ஸ்டாலின் (திமுக).

    விடியல் சேகர் (தமிழ் மாநில காங்கிரஸ்).

    மல்லிகா தயாளன் (மதிமுக) மற்றும் 8 சுயேச்சைகள்.

  • துறைமுகம்

    க.அன்பழகன் (திமுக).

    தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்).

    இ.பி.பாண்டியன் (மதிமுக) மற்றும் 3 சுயேச்சைகள்.

  • தியாகராய நகர்

    சுலோச்சனா சம்பத் (அதிமுக).

    ஜெ.அன்பழகன் (திமுக).

    தியாகராஜன் (மதிமுக)

    களஞ்சியம் (சிவசேனா) மற்றும் 6 சுயேச்சைகள்.

  • மயிலாப்பூர்

    கே.என்.லட்சுமணன் (பா.ஜ.க.)

    டாக்டர் மைத்ரேயன் (அதிமுக).

    முகம்மது அம்மான் கான் (தமிழ் மக்கள் கட்சி) மற்றும் 6 பேர்.

  • திருவல்லிக்கேணி

    எஸ்.ஏ.எம்.உசேன் (திமுக).

    விஜயா தாயன்பன் (மதிமுக)

    ராஜ்குமார் (காங்கிரஸ்).

    சிவஞானசம்பந்தன் (ராஷ்டிரிய ஜனதாதளம்) மற்றும் 11 பேர்.

  • அண்ணாநகர்

    ஆற்காடு வீராசாமி (திமுக).

    சி.ஆறுமுகம் (பாட்டாளி மக்கள் கட்சி).

    அப்பன்துரை (மதிமுக)

    குமரன் (தேசியவாத காங்கிரஸ்)

    அசோக் (சமாஜ்வாடிக் கட்சி) மற்றும் 8 பேர்.

  • எழும்பூர் (தனி)

    பரிதிஇளம்வழுதி (திமுக).

    ஜான் பாண்டியன் (அதிமுக).

    மணிமாறன் (மதிமுக) மற்றும் 6 பேர்.

  • பூங்காநகர்

    டி.ராஜேந்தர் (திமுக).

    விநாயகமூர்த்தி (தமிழ் மாநில காங்கிரஸ்).

    நன்மாறன் (மதிமுக) மற்றும் 5 பேர்.

  • புரசைவாக்கம்

    ரங்கநாதன் (திமுக).

    வெற்றிவேல் (தமிழ் மாநில காங்கிரஸ்).

    தாயகம் குருநாதன் (மதிமுக) மற்றும் 8 பேர்.

  • சைதாப்பேட்டை

    வை.பெருமாள் (திமுக).

    சி.ஆர்.பாஸ்கரன் (பா.ம.க.).

    சுப்ரமணி (மதிமுக) மற்றும் 8 பேர்.

  • தாம்பரம்

    மீ.அ.வைத்தியலிங்கம் (திமுக).

    சக்ரபாணி ரெட்டியார் (த.மா.கா.).

    பாலவாக்கம் சோ (மதிமுக) மற்றும் 14 பேர்.

  • வில்லிவாக்கம்

    டி.நெப்போலியன் (திமுக).

    டாக்டர் செல்லக்குமார் (தமிழ் மாநில காங்கிரஸ்).

    சிவப்பிரகாசம் (மதிமுக).

    யோசுவா (புரட்சிபாரதம்) மற்றும் 10 பேர்.

  • ராயபுரம்

    ஜெயக்குமார் (அதிமுக).

    நற்குணம் (திமுக).

    கோபிநிாதன் (மதிமுக) மற்றும் 5 பேர்.

  • பெரம்பூர்

    செங்கை சிவம் (திமுக).

    மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்).

    நடராஜன் (மதிமுக) மற்றும் 7 பேர்.

  • டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

    திருமதி. சற்குண பாண்டியன் (திமுக).

    சேகர் பாபு (அதிமுக).

    மனோகரன் (மதிமுக) மற்றும் 7 பேர்.

  • ஆலந்தூர்

    ஆர்.எம்.வீரப்பன் (எம்.ஜி.ஆர். கழகம்).

    பா.வளர்மதி (அதிமுக).

    இலவக்குமார் (மதிமுக).

    பி.ராஜப்பா (புதிய தமிழகம்) மற்றும் 9 பேர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+