ஜெ.க்குப் பாடம் புகட்டுங்கள்: கருணாநிதி
வேலூர்:
இன்னும் ஆணவம், அகம்பாவம் குறையாத ஜெயலலிதாவுக்கு நன்றாகப் பாடம்புகட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதிபேசிய போது,
திமுக ஆட்சியில் அனைத்து வகையான மக்களுக்கும் நன்மை செய்யும் பொருட்டுநல்ல பல திட்டங்களைத் தீட்டி, நிறைவேற்றி இருக்கிறோம்.
ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியிலோ எந்தத் திட்டமும் நடக்கவில்லை. ஒப்பிட்டுப்பார்த்தால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று உங்களுக்கே தெரியும்.
அன்று கஜானா பணம் எல்லாம் போயஸ் தோட்டக் கஜானாவுக்குச் சென்றது.அதனால்தான் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை.
இன்றோ எல்லாப் பணமும் கோட்டை கஜானாவுக்குச் சென்றதால், அனைத்துப்பணிகளும் நன்றாக நடந்தன.
திமுகவினர் தேர்தல் கமிஷனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருகின்றனர்.தேர்தல் கமிஷன் தன்னிச்சையாகத் தனிப்பட்ட ஸ்தாபனமாக செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட தேர்தல் கமிஷனின் உத்தரவை உதாசீனப்படுத்துவதா?
"நானே முதல்-அமைச்சர் ஆவேன்" என்கிறார் ஜெயலலிதா. இது தேர்தல் கமிஷனைக்காலில் போட்டு மிதிப்பது போல் ஆகும்.
இன்னும் ஜெயலலிதாவுக்கு ஆணவம், அகம்பாவம் குறையவில்லை. அவர்எல்லையைக் கடந்து அத்துமீறிச் செல்கிறார். இப்படிச் செல்வது ஆபத்தில்தான் முடியும்.
இதை நான் எச்சரிக்கையாகச் சொல்லவில்லை. அன்போடு அறிவுரையாகத்தான்சொல்கிறேன்.
அவரைத் திருத்த பொதுமக்களாகிய நீங்கள்தான் பாடம் புகட்ட வேண்டும் என்றுபேசினார் கருணாநிதி.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications