மக்களே, உங்களை நம்பித்தான் இருக்கிறேன்- ஜெ. உருக்கம்
மதுரை:
எனக்கு எதிரான சதிகளைச் சுக்கு நூறாக்கி, எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தே தீருவேன்என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்,
கருணாநிதி என்னை அழிக்கச் சதித் திட்டம் தீட்டினார் என்பதற்கும், என்னைப்பழிவாங்க அவர் ஆட்சி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்பதற்கும்ஆயிரம் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.
கருணாநிதியின் குற்றச்சாட்டுக்களை அவ்வப்போது நான் முறியடித்து வந்ததால்,என்னைச் சட்டத்தின் மூலம் பழி வாங்க முயற்சித்தார். இதற்காக பொய் வழக்குகளைஉருவாக்க அதிகாரிகளை மிரட்டினார்.
1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே எனக்கும், என் தலைமையில் உள்ளஅதிமுகவுக்கும் எதிராகக் கருணாநிதி இழைக்கும் அநீதிக்கு அளவே இல்லாமல்போய்விட்டது.
நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே எனக்குத் தண்டனை கிடைக்கும் என்றும் நான்தேர்தலில் நிற்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தது நடந்துவிட்டது.
மத்தியிலும் மாநிலத்திலும் அராஜக, அநியாய ஆட்சிகள் நடப்பதால், பொல்லாங்கும்சூழ்ச்சியும் தற்காலிகமாகப் பூரித்துப்போய் நிற்கிறது.
கடந்த ஐந்தாண்டுகளாக எனக்கு எதிராக இழைக்கப்படும் அத்தனை தீமைகளையும்இடர்ப்பாடுகளையும் தாங்குவதற்கேற்ப, எதையும் தாங்கும் இதயத்தைக்கொடுத்தவர்கள் தமிழக மக்களாகிய நீங்கள்தான்.
எனக்கு நியாயம் வழங்குகள். எல்லாத் தீர்ப்புக்களையும் வெல்லும் தீர்ப்பு மக்கள்தீர்ப்புத்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
உங்களை நம்பித்தான் நான் இருக்கிறேன். நீங்கள் காட்டும் ஆதரவுதான் எனக்குத்தெம்பையும் துணிவையும் தருகிறது.
எனக்கு எதிரான சூழ்ச்சிகளையும் சதிகளையும் உங்கள் ஆதரவோடு சுக்கு நூறாக்கி,புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை அமைத்தே தீருவேன் என்று சபதம் ஏற்கிறேன்.
எனது சபதத்தை நிறைவேற்ற எனக்குத் துணைபுரியுங்கள் என்றார் ஜெயலலிதா.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications