புவனகிரியில் சுயேச்சைக்கு அ.திமு.க ஆதரவு
சென்னை:
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின்வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அத்தொகுதியில் சுயேச்சைவேட்பாளருக்கு ஆதரவு தருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
புவனகிரி தொகுதியில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டது. மாற்று அ.தி.மு.க. வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருந்தகருணாநிதி, ராமஜெயம் ஆகியோரின் வேட்பு மனுக்களுடன், அ.தி.மு.க.தலைமையகத்திடமிருந்து அத்தாட்சி கடிதம் இணைக்கப்படாததால் அவர்களதுமனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து புவனகிரி தொகுதியில் அ.தி.முக. போட்டியிட முடியாத நிலைஏற்பட்டு விட்டது. இந்த நிலையில், எஸ்.அருள் என்ற சுயேச்சை வேட்பாளருக்குஅ.தி.மு.க .ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், புவனகிரி தொகுதியில் அ.திமு.க.வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
எனவே சுயேச்சை வேட்பாளர் எஸ்.அருளை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அருளுக்குவழங்கப்படும் சின்னத்திற்கு ஆதரவாக அ.தி.மு.கவினர் தீவிர பிரசாரம் செய்துஅவருக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
புவனகிரி தொகுதியில் மக்கள் தமிழ் தேசம் சார்பில், இந்தியன் வங்கியின் முன்னாள்தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications